Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-01.2023
Share:

By Village Missionary Movement

Friday, 06-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 07-01.2023

 

டியூசன் ஊழியம்

 

“ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.” - சங்கீதம் 22:30

 

தன் இரு கால்களும் ஊனமுற்ற நிலையிலும் தன் சகோதரன் மற்றும் நண்பர்களின் உதவியால் தென் தமிழகத்தில் பல கல்வி நிலையங்கள் உருவாக காரணமாய் இருந்தவர்கள் சாராள் தக்கர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று நினைத்த நம் சமுதாயத்தின் நிலையை தன் சகோதரன் எழுதிய கடிதத்தின் மூலம் அறிந்துகொண்ட இளம் வாலிபப்பெண்ணாகிய சாராள் தக்கர், தான் மாற்றுத்திறனாளியாய் இருந்தபோதிலும் தன் நகைகளை கொடுத்தும், பலரது உதவியை நாடியும் லட்சக்கணக்கான பெண்கள் கல்வி அறிவினைப் பெற உதவினார். இவர் இந்தியாவிற்கு வராமலேயே பள்ளி, கல்லூரி உருவாக காரணமாய் இருந்தார். அது மட்டுமல்லாமல் தனது மரணம் வரையிலும் நம் தேசத்தின் மேல் கரிசனை கொண்டவராக இருந்தார். அவர் நிறுவிய கல்வி நிறுவங்கள் மூலம் இன்றுவரை இலட்சக்கணக்கான மாணவியர்கள் கல்வியறிவு பெற்றதோடு ஆண்டவரையும் அறிந்து கொண்டார்கள். அவர்களில் அநேகர் சமுதாயத்தில் சிறந்தவர்களாகவும், தலைமைத்துவ பொறுப்பிலும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு ஊனமுற்ற பெண்ணின் வாஞ்சை சமுதாயத்தில் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது பார்த்தீர்களா? 

 

சாராள் தக்கரைப் போல வேதத்திலும் தேவன் பலரைத் தெரிந்து கொண்டது அவர்களுடைய தகுதியை அடிப்படையாக வைத்து அல்ல. உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் இயேசு கிறிஸ்துவின் 12 சீஷர்களைக் கூறலாம். என் பின்னே வாருங்கள் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன் என்று சொன்ன அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவர் பின்னே சென்றார்கள். நடந்தது என்ன? உலகத்தைக் கலக்குகின்ற ஊழியர்களாக ஒவ்வொருவரும் மாறிவிட்டனர். படிப்பறிவில்லாத பேதுரு பிரசங்கித்த முதல் பிரசங்கத்திலேயே 3000 பேர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். யார் தன்னை தகுதி இல்லாதவன் என்று எண்ணி தன்னை இயேசுவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறானோ அவனைத் தகுதிப்படுத்தி உயர்த்துவதில் இயேசுவுக்கு நிகர் இயேசு மட்டுமே. ஆகவே நாமும் நம் தகுதியைப் பாராமல் தேவகரத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து செயல்படுவோமானால் ஒரு கூட்டத்தை வழி நடத்தும் தலைவனாக மாறமுடியும். எப்படி என்கிறீர்களா? தன் சிறு வயதில் சுட்டித்தனத்தோடு எது சரி எது தவறு என்று உணரமுடியாமல் மனம் போன போக்கில் வாழ்கின்ற சிறுவர்கள் பெருகி விட்டார்கள். இவர்களை ஒருங்கிணைத்து ஆண்டவருடைய அன்பை, இவர்களுக்கு சிறு சிறு உதவிகள் மூலம் அறிவிப்பதே இந்த டியூசன் சென்டர்.

 

அதை உங்கள் கிராமத்தில் நீங்கள் செய்யலாம். இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாம் ஒவ்வொருவரும் தலைவர்களை உருவாக்குகின்ற பணியில் ஈடுபட முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். கல்வி ஒரு தனி மனிதனின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கிறது. அதை தேவ அன்போடு சொல்லிக் கொடுப்போமானால் அவன் நிச்சயமாக தேவ சந்ததியாய், ஒரு சீஷனாய் வளருவான். எமது ஊழியத்திலே 12 பிள்ளைகள் கொண்ட டியூசன் சென்டரை பணித்தளங்கள்தோறும் நடத்தி வருகிறோம். இதில் பயிலும் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள். உங்கள் பகுதியில் நீங்களும் டியூசன் எடுக்க முன் வரலாம்.

 

நினைவிற்கு: உங்கள் டியூசன் சென்டரில் 12 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் 12 தலைவர்களை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Mrs. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு: 

நம் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் ஒவ்வொருவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet