Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-01.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 08-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 08-01.2023 (Kids Special)

 

“… பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது…” – 1 தீமோ. 6:10

 

Hello குட்டீஸ் எப்படி இருக்கீங்க, எல்லோருக்கும் Happy New Year. நீங்க எல்லோரும் Christmas & New year–ஐ Jolly –யா Celebrate பண்ணுனீங்களா, ok குட்டீஸ் கதைக்குள்ளே போகலாமா,

 

இராபர்ட் மாமா வீட்டீல் நிறைய பசு மாடுகள் இருந்தது. அந்த பசுக்கள் தருகின்ற பாலை தினமும் போய் வீடு வீடாய் விற்று தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த பால் மூலம் பணம் அதிகம் வர ஆரம்பித்ததால் பேராசைப்பட்ட இராபர்ட் மாமா பாலில் அதிகம் தண்ணீரை கலந்து விற்க ஆரம்பித்தார். தினமும் இவரிடம் பால் வாங்குகிற வாடிக்கையாளர்கள் என்ன பால் இவ்வளவு தண்ணீராக இருக்கிறது என்று கேட்க இவரோ மாடுகளுக்கு பசுமையான புல் இல்லாததால் இப்படி தண்ணீராக இருக்கிறது என்று சாமர்த்தியமாக பதில் சொல்லி விட்டு கிளம்பினார், இப்படியே குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தை வைத்து இன்னும் அதிகம் பசுக்கள் வாங்கி பால்பண்ணை வைத்து முதலாளி ஆகிவிடலாம் என்று எண்ணிய அவர், தான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு சந்தைக்கு புறப்பட்டார். போகும் வழியில் பசி எடுக்கவே ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பாட்டு பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுவிட்டு அப்படியே படுத்துவிட்டார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒரு குரங்கு மரத்திலிருந்து இறங்கி அவர் வைத்திருந்த மற்றொரு பொட்டலத்தை சாப்பாடு என்று நினைத்து எடுத்துக்கொண்டு வேகமாக மரத்தில் ஏறி பிரித்தது. அது காசு பொட்டலம். குரங்குக்கு பெரிய ஏமாற்றம்!. அந்த நேரத்தில் அந்த இராபர்ட் மாமா கண்விழித்துப் பார்த்து தான் வைத்திருந்த காசு பொட்டலத்தை தேடினார். கோபத்தில் இருந்த குரங்கு மேலேயிருந்து ஒரு காசை எடுத்து அவர் தலையில் போட்டது. இவர் நிமிர்ந்த பார்க்கவே காசு பொட்டலம் குரங்கு கையில் இருந்தது. இராபர்ட் அந்த குரங்கிடம் காசை போட்டுவிடு என்று கெஞ்சினார். ஆனால் குரங்கோ மரத்திற்குப் பக்கத்தில் இருந்த குளத்தில் பாதி காசையும் இவரிடம் பாதி காசையும் போட்டது. இராபர்ட்க்கு புத்தி தெளிந்தது. தண்ணீரை ஊற்றிய பணம் தண்ணீருக்குள் போய் விட்டது. பாலுக்கு வேண்டிய பணம் என்னிடம் வந்தது. இனிமேல் இப்படிப்பட்ட தவறை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று எண்ணி வீட்டிற்கு வந்து அன்றையிலிருந்து கலப்படமில்லாத பாலை கொடுக்க ஆரம்பித்தார். 

 

குட்டி தம்பி தங்கச்சி, பார்த்தீர்களா, அநியாயமாய் சம்பாதித்த பணம் அவருக்கு கிடைக்காமலே போய்விட்டது. இப்படித்தான் பொய் சொல்லி, திருடி, அப்பா அம்மாவை ஏமாற்றி வாங்குகிற எல்லாம் நமக்கு ஏமாற்றத்தைத்தான் கொண்டு வரும். இயேசப்பாவுக்கு அது பிடிக்காது. எனவே இந்த புது வருடத்தில் உங்கள் பழைய பாவ சுபாவத்தை விட்டுவிட்டு புதிய தீர்மானங்களை எடுங்கள். Ok.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet