Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16-01.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 15-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 16-01.2023

 

எதிரி யார்? 

 

“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” -1பேதுரு 5:8

 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பூமியிலே தனது ஊழியத்தை செய்து கொண்டிருந்தபோது சமாரியருடைய ஒரு கிராமத்தில் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனங்களுக்கு நன்மை செய்கிற, வியாதிகளை குணமாக்குகிற இயேசுவை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததைக் கண்ட அவருடைய சீஷர்களான யாக்கோபும் யோவானும் மிகுந்த கோபமடைந்தார்கள். அக்கோபத்தில் வானத்திலிருந்து அக்கினி இறங்கி, எலியா செய்தது போல அக்கிராம மக்களை அழிக்கலாமா என்று இயேசு கிறிஸ்துடம் கேட்டார்கள். அதைக் கேட்ட ஆண்டவர் அவர்களை அதட்டி, தான் மனிதர்களை அழிக்க அல்ல, இரட்சிக்க வந்ததாக கூறினார்.

 

பிரியமானவர்களே! சுவிசேஷத்தை எதிர்க்கிறவர்கள், சபையை அழிக்க முயற்சி செய்பவர்கள் பெருகி வரும் இக்காலத்தில் மேற்கண்ட சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான படிப்பினையை கற்றுக் கொடுக்கிறது. அது என்னவென்றால், சுவிசேஷத்தை எதிர்ப்பவர்கள் நமக்கு எதிரிகள் கிடையாது. சபைகளை தாக்குகிறவர்கள் அழிந்து போக, தண்டிக்கபட நாம் விரும்பக் கூடாது. மாறாக மத்தேயு 5:44 ன் படி அவர்களை ஆசீர்வதித்து, சிநேகித்து, ஜெபித்து அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அவர்களுடைய இரட்சிப்பிற்காக ஜெபிக்க வேண்டும். 

 

இயேசுகிறிஸ்து பூமியிலிருந்த நாட்களில் ஒரு மனிதனையும் எதிரியாக பார்த்து கசந்து கொள்ளவில்லை. காட்டிக் கொடுத்த யூதாஸை “துரோகி” என்று அழைக்காமல் “சிநேகிதனே” என்றார். சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டார்.

 

நமக்கு இருக்கும் ஒரே எதிரி பிசாசும் அவனுடைய கூட்டம் மட்டும் தான்! (1பேதுரு 5:8) அவன்தான் மனிதர்களை தன் இஷ்டப்படி நடத்துகிறான். (எபே.2.2)

 

பிரியமானவர்களே! மனிதர்களில் யாரையாவது எதிரியாக நினைத்து, அவர்கள் மீது கசப்புடன் இருப்போமானால் இன்னும் சத்தியத்தை அறியவில்லை என்பதே பொருள். சுவிசேஷ எதிர்ப்பாளர்களின் சங்கங்களுக்காக ஜெபிப்போம். யூடியுப்பில் கிறிஸ்தவர்களையும் ஊழியர்களையும் தூஷிக்கிறவர்களை ஆசீர்வதித்து ஜெபிப்போம். அவர்களை திட்டி கமெண்ட்ஸில் சண்டைபோட வேண்டாம்.

 

கிறிஸ்துவுக்கு விரோதிகளாயிருந்த நம்மை இரட்சித்த தேவன், அவர்களையும் இரட்சிப்பார். நாம் ஊழியம் செய்கிறவர்களாக இருப்போமென்றால் கிராமங்களில் இப்படிப்பட்டோரைப் பார்க்கும் 

 

நமது பார்வையும் மனநிலையும் மாறட்டும். ஆமென்.

- J. சந்தோஷ்

 

ஜெபக்குறிப்பு:

நம் வளாகத்தில் ஸ்கூல் கட்ட வேண்டிய அவசியத்தில் உள்ளோம். ஆயத்த வேலைகளில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet