Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06-02.2023
Share:

By Village Missionary Movement

Monday, 06-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 06-02.2023

 

உன் முயற்சியால் மட்டுமல்ல... 

 

“…பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்...” - சகரியா 4:6 

 

டேவிட் அண்ணன், வாலிபனான சாமுவேலிடம் பரிசுத்தமாக வாழ வேண்டியதின் அவசியத்தை குறித்து விரிவாக பேசினார். சாமுவேலோ, “இக்காலச் சூழ்நிலையில் பரிசுத்தமாக வாழ முடியும் என்று நான் நம்பவில்லை, ஆனாலும் நான் முயற்சி செய்கிறேன் அண்ணன்” என்றான். உடனே அண்ணன் அவனிடம் “சாமுவேல், உன்னுடைய முயற்சியால் பரிசுத்தமாய் வாழ்வது என்பது கூடாத காரியம். நிச்சயம் தோல்வியைத்தான் காண்பாய்” என்றார். “முயற்சி செய்ய விரும்பும் தனக்கு வாழ்த்து சொல்லாமல் எதிர்மறையாகப் பேசுகின்றாரே!” என்று சாமுவேல் யோசித்தான்.

 

ஆனால் அண்ணன் சொன்னது சரிதான். பரிசுத்தமாக வாழ்வது என்பது முயற்சியினால் மட்டும் சாத்தியமாகாது. அது “தேவன் என்னை பரிசுத்தமாய் காப்பார்” என்ற விசுவாசத்தாலும் பரிசுத்த ஆவியானவராலுமே சாத்தியமாகும். ஆம், “ கர்த்தர் நம்மை பரிசுத்தமாக வாழ வைக்க வல்லவர்” என்ற விசுவாசம்தான் நம்மை பரிசுத்தமாக வாழ வைக்கும். சுருங்கச் சொன்னால், ஆண்டவரின் ஒத்தாசை இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது; நமது முயற்சியில்லாமலும் ஆண்டவர் எதுவும் செய்ய மாட்டார் (Without God we cannot; without us He will not!) கோலியாத்தை தாவீது வென்றது வெறும் முயற்சியின் விளைவு அல்ல. அது தாவீது தேவன் மேல் வைத்திருந்த விசுவாசத்தின் விளைவு. நாமும் கோலியாத்து போன்ற சோதனைகளை தேவன் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தால் மேற்கொள்ள முடியும். தேவன் நம்மோடு கூட வருவார். பலன் தருவார். சோதனையில் நாம் வெற்றி பெறுவோம்.

 

“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவ ஆவியினாலே ஆகும்” என வேதம் கூறுகிறது. ஆம் நம்முடைய பெலத்தினால் முடியாததை, ஆவியானவர் துணையினால் செய்ய முடியும். தேவனுக்குப் பிரியமான காரியங்களில் நம்மை ஈடுபடுத்தும் போது நமக்குள் விசுவாசம் பெருகும். அந்த விசுவாசத்தோடு முயற்சிகளும் இணையும்போது அற்புதமான காரியங்கள் நடக்கும். யோசுவாவும் காலேபும் கானானுக்குள் பிரவேசிக்க விசுவாசத்தை சார்ந்து நின்றனர். ஆனால் அவர்களுடன் வேவு பார்த்த மற்ற பத்துப்பேர் சுய பலத்தை சார்ந்திருந்ததால் கானானுக்குள் போக முடியவில்லை. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.

- S. பேர்லின் செல்லபாய் 

 

ஜெபக்குறிப்பு: 

நமது வளாகத்தில் நடைபெறும் கட்டிடப் பணிகளை தேவன் பொறுப்பெடுக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet