Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-02.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 19-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 19-02.2023 (Kids Special)

 

புலிக்குட்டி 

 

"பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்;..” - எசேக்கியேல் 18:20

 

ஒரு வேட்டைக்காரன் காட்டில் விலங்குகளை வேட்டையாட செல்வான். ஒருநாள் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது சிறிய புலிக்குட்டி ஒன்றைக் கண்டான். அது புலிக்குட்டி என்று அறியாமல் காட்டுப் பூனை என்று ஆசையோடு வீட்டிற்கு கொண்டு வந்து அதை வளர்க்க ஆரம்பித்தான். அது நாய்க்குட்டியோடும் அந்த வேட்டைக்காரனின் பிள்ளைகளான கரண், சரண் இரண்டு பேரோடும் அருமையாய்ப் பழகி சந்தோஷமாய் விளையாடியது. ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் நாய்க்குட்டியோடும் புலிக்குட்டியோடும் சேர்ந்து விளையாடுவது கரணுக்கு செம்ம ஜாலியா இருக்கும். சரண் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கிரிக்கெட் விளையாடப் போய் விடுவான். சில மாதங்களில் குட்டிப்புலி வளர்ந்ததால் வித்தியாசத்தை கண்டனர். இது புலி என்று அறிந்தாலும் விட மனதில்லை.

 

பக்கத்து வீட்டில் உள்ள எல்லோரும் அந்தப் புலியை பார்த்து பயந்து, இதை காட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள். ஒரு நாள் நம்மை அழித்துவிடும் என்று சொன்னபோது, வேட்டைக்காரனுக்கு மனசு வரல. இதை என் பிள்ளையைப் போல் வளர்த்து விட்டேன். இது நம்மை ஒன்றும் செய்யாது என்று சமாளித்து விடுவான். ஒரு நாள் கரண் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும்போது காலில் அடிபட்டு ரத்தம் வடிய ஆரம்பித்தது. புலி வேகமாக பாய்ந்து வந்து தன் நாவினால் அந்த காயத்தை அன்போடு நக்கிக் கொடுத்தது. என் மேல் அந்தப் புலிக்கு எவ்வளவு பாசம் என்று கரண் நினைத்துக் கொண்டிருக்கும் போது ரத்தத்தை ருசி பார்த்த புலிக்குள் ஜென்ம சுபாவம் தலைதூக்க ஆரம்பித்தது. ஒரே பாய்ச்சலில் கரணை அடித்துக் கொன்றது. செல்லமாய்ப் பாசத்தோடு வளர்த்த புலிக்குட்டியா இது என்று வேட்டைக்காரன் ஓடி வந்தான். அவன் மீதும் பாய்ந்து காயப்படுத்தியது. “பக்கத்து வீட்டு நண்பர்கள் சொன்ன அறிவுரையை கேட்காமல் போனேனே, புலிக்குட்டிக்கு ஆசைப்பட்டு என் மகனைப் பறிகொடுத்து விட்டேனே” என மனம் வருந்தினான். வனத்துறைக்கு தகவல் கொடுத்து விட்டு அந்தப் புலியை ஒப்படைத்த பின்பு தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

 

என்ன குட்டீஸ்! புலிக் கதை ரொம்ப சோகமா முடிந்தது இல்லையா? பாவத்தோடு விளையாடுவதும் இப்படித்தான் நம்மை அழித்து விடும். சின்ன பொய், திருட்டு, பொறாமை, செல்போன் பார்ப்பது இப்படிப்பட்ட பாவங்களை ஜெயிக்க சின்ன வயதிலேயே இயேசப்பா கிட்ட கிருபை கேட்கணும். குட்டி செல்லங்களே! ஓகே வா...

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet