Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20-02.2023
Share:

By Village Missionary Movement

Monday, 20-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 20-02.2023

 

நீங்கள் பாத்திரவான்களா?

 

"அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்." - லூக்கா 7:4

 

ஒரு முறை ஒரு ஊழியரின் நண்பர், அவரிடம் “எனது மனைவிக்கு மேஜர் ஆபரேஷன் ஒன்று நடந்தது. அதன் பின்பு குளிர் காய்ச்சல் வந்து மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறாள்” என்று அழுதார். ஊழியரும் அந்த சகோதரிக்காக ஜெபிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர், அந்த சகோதரி செய்த அநேக நல்ல காரியங்களை நினைவுக்கு கொண்டு வந்தார். அநேக ஊழியருக்கு உணவளித்து உபசரித்திருந்தார்கள். இந்த ஊழியரும் மூன்று முறை நற்செய்தி அறிவிக்க அந்த இடத்திற்குச் சென்ற போது அவர்கள் தான் சாப்பாடு கொடுத்து உபசரித்தார்கள். ”ஆண்டவரே, நீர் தயவு காட்ட இந்த சகோதரி தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறி அந்த உயிருக்காகப் போராடி ஜெபித்தார். அந்த சகோதரிக்கு கர்த்தர் சுகம் கொடுத்தார்.

 

நூற்றுக்கு அதிபதிக்குப் பிரியமான வேலைக்காரன், வியாதிப்பட்டு, மரணத்தோடு போராடிக் கொண்டிருந்தான். இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட நூற்றுக்கு அதிபதி, யூதருடைய மூப்பரை இயேசுவினிடத்தில் அனுப்பி “அவர் வந்து இந்த வேலைக்காரனை சுகப்படுத்த வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அந்த மூப்பர்கள் இயேசுவிடம் வந்து “நீர் இதைச் செய்ய அவன் தகுதியுள்ளவன். நம் மக்களை இவன் மிகவும் நேசிக்கிறான்; நமக்கு ஒரு ஆலயத்தையும் கட்டினான்” என்று கருத்தாய் வேண்டினார்கள். இதைக் கேட்ட இயேசு அந்த நூற்றுக்கு அதிபதி வீட்டை நோக்கி நடந்தார். வீட்டுக்குப் பக்கத்தில் வந்தபோது அவன் தன் நண்பர்களை அவரிடத்தில் அனுப்பி, “நீர் என் வீட்டிற்கு வர நான் தகுதியுள்ளவனல்ல. எனவே நீர் ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும். என் வேலைக்காரன் சுகமாகி விடுவான்” என்று கூறினான். அனுப்பப்பட்ட நண்பர்கள் திரும்பிப் போனபோது வேலைக்காரன் சுகமடைந்திருந்தான்.

 

பிரியமானவர்களே! நம்முடைய கிரியையினால் நாம் பரலோகத்திற்குச் செல்ல முடியாது. ஆனாலும் நம்முடைய அன்பின் கிரியைகளுக்கு பரலோகில் பலன் உண்டு என்பதை மறந்து போக வேண்டாம். கொர்நேலியு செய்த தான தர்மங்கள் தேவ சமூகத்தில் நினைவு கூரப்பட்டது. தபீத்தாளின் நற்கிரியைகளும் அவளை உயிரோடு எழுப்ப ஒரு காரணமாயிற்று. சில கிரியைகள் தேவனிடமிருந்து தயவையும், அற்புதத்தையும் பெறக் காரணமாகும். நாமும் நன்மையைப் பெற்றுக் கொள்ள பாத்திரவான்களாக வாழ்வோம்! உங்களால் இயன்றதைச் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் பலன் உண்டு என்பதை ஒருபோதும் மறந்து போகாமல், சோர்ந்து போகாமல் நன்மை செய்யுங்கள்.

- Mrs. பியூலா

 

ஜெபக்குறிப்பு:

நமது மீடியா ஊழியத்திற்கென்று தேவையான உபகரணங்கள் வாங்கப்பட, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet