Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16-04.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 16-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 16-04.2023 (Kids Special)

 

மேஜிக் பலிக்காது

 

“அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.” – சங்கீதம் 119:72   

 

கூக்கூ... ஜிகுபுகு ..ஜிகுபுகு.. என்று சத்தம் கேட்டதும்... ஹய்யா Train போகுதுன்னு டாட்டா சொல்லுவோம், happy யா இருக்கும் அப்படித்தானே குட்டீஸ். யாரெல்லாம் Train ல போயிருக்கீங்க... ரொம்ப ஜாலியா இருக்கும்ல... Trainல நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தைத் தான் இன்றைக்கு கேட்கப் போகிறோம், கேட்கலாமா? ஆர் யூ ரெடி ?

 

வேலைக்குப் போறவங்க, டூர் போறவங்க, காலேஜ் போறவங்க இப்படி நிறைய பேர் Trainல பயணம் செய்வாங்க இல்லையா? ஒரு முறை அதில் இயேசப்பாவுக்காக ஊழியம் செய்கின்ற ஒரு அங்கிள் பயணம் செய்தாங்க. மேஜிக் பண்ற ஒருத்தரும் ஏறினார். மேஜிக் என்றதும் Sunday school vbs - ல உங்கள சந்தோஷப்படுத்தி செய்கிற மேஜிக் என்று நினைத்து விடாதீங்க. இது மாயவித்தையைப் பயன்படுத்தி செய்வது! அவர் மந்திரங்களைச் சொல்லி தனக்கு தெரிந்த மாயவித்தையை செய்து பணம் சம்பாதித்து வந்தார். “எல்லாரும் என்னை பாருங்க. இந்த டப்பா emptyயா இருக்குது” டப்.. டப்.. என்று மேலும் கீழும் தட்டினார். அதே டப்பாவை திறந்து தட்டினால் நிறைய காசு விழுந்தது எல்லோருக்கும் ரொம்ப ஆச்சரியம். இப்படியே ஒவ்வொரு கோச்சாக சென்று நிறைய பணம் சம்பாதித்தார். இப்பொழுது ஊழியம் செய்கிற அண்ணன் கோச்சில் அதே மேஜிக்கை செய்ய முயன்றபோது செய்ய முடியவில்லை. டப்பாவை திறந்து கொட்டினால் காசு விழவில்லை, சுத்தி பார்த்தார். ஊழியம் செய்கின்ற அங்கிள் பைபிள் வாசித்துக் கொண்டிருந்தார். இந்த பைபிள் தான் காரணம் என்று நினைத்து அதை வாங்கி வேறொரு இடத்தில் தள்ளி வைத்து விட்டார். 

 

சரி, இப்பொழுது நம்ம வேலையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி எல்லோரும் என்னைப் பாருங்கள் empty டப்பாவில் இருந்து காசு மழை கொட்டப் போகிறது என்றதும் எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருக்க ஒன்றும் நடக்கவில்லை. அவருக்கு வருத்தமாகிவிட்டது. ஊழியரான அங்கிள் சொன்னார், “நீங்க பைபிளை வாங்கி தூரமா வச்சாலும் வேத வசனங்கள் என் இருதயத்தில் இருக்கின்றதே! எனக்குள் இயேசப்பா இருப்பதால் அவருடைய வல்லமையும் இங்கே இருக்கிறது” என்று சொன்னதும் இது என்ன! இயேசப்பா வல்லமைக்கு முன்னாடி மேஜிக் பலிக்காது போலயே, இயேசு தான் உண்மையான தெய்வம் என்று அறிந்து அந்த கோச்சுல பயணம் செய்த எல்லோரும் இயேசப்பா மேல நம்பிக்கை வச்சாங்க. அந்த ஊழியர் யார் தெரியுமா? அவர்தான் சாது சுந்தர்சிங். அவருக்குள்ள இருந்த இந்த வேத வசனம் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது பார்த்தீங்களா? அன்பு செல்லங்களே! உங்களுக்கும் கற்றுக் கொடுக்கின்ற வேத வசனங்களை மறக்கக்கூடாது. அது மட்டுமல்ல தினமும் ஒரு வசனமாவது மனப்பாடம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். உயிருள்ள வசனம் உனக்கும் உன் மூலம் மற்றவர்களுக்கும் ஆண்டவரின் வல்லமையை அறிந்து கொள்ள உதவி செய்யும். என்ன குட்டீஸ், வேதம் எவ்வளவு மகத்துவமானது என்பதைத் தெரிந்து கொண்டீங்க இல்லையா? இன்றைக்கே வேதத்தை படிக்க ஆரம்பிங்க. ஓகே தானே!

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom