Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-04.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 23-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 23-04.2023

 

ஜீசஸ் இருந்தா போதும் 

 

“குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” – 1 யோவான்.5:12

 

ஒரு அழகான கிராமத்தில் ராஜூ என்ற குட்டித் தம்பி இருந்தான். இவனுடைய அப்பா ராணுவ வீரராக பணி புரிந்தார். ஊரில் அவருக்கு ரொம்ப மரியாதை. நாட்டை பாதுகாக்கின்ற படைவீரர் அல்லவா? எல்லோரும் அவரைப் பார்த்தால் ஒரு சல்யூட் அடிப்பார்கள். ராஜூவின் அப்பாவிடம் ஒரு துப்பாக்கி இருக்கும். ராஜூ துப்பாக்கியை எடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் அப்பா சொல்லுவார், “தம்பி, அதில் உள்ள தோட்டா மிகவும் சக்தி வாய்ந்தது. பெரிய யானையையும் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் வீழ்த்தக் கூடியது. ஆதலால் நீ தொடக்கூடாது என்பார்.

 

ஒரு நாள் அப்பாவுக்குக் கிடைத்த லீவு நாட்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல புறப்பட்டனர். ராஜூ ரொம்ப குஷியாக கிளம்பினான். என்ன குட்டீஸ் உங்களுக்கும் சுற்றுலா என்று சொன்னதும் ஆசையா இருக்கா... ராஜூ முதல் ஆளாக காரில் போய் உட்கார்ந்தான். அப்போது அப்பா ராஜூவை அழைத்து வா ஜெபம் பண்ணிவிட்டு தான் புறப்பட வேண்டும் என்றார். நீங்களும் எங்கே போனாலும், ஜெபித்து விட்டு தான் செல்ல வேண்டும். ஓகே வா. சுற்றுலா செல்லும் இடத்தை அடைந்ததும் அப்பா ஜெபம் செய்தார். அப்பாவின் கரத்தைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான். அழகான கலர் கலரான பூக்களைப் பார்த்து ரசித்துக் கொண்டே பூக்களின் பெயர்களை கேட்டு பேசிக்கொண்டே நடந்து போனார்கள். "அப்பா நீங்க பலசாலியாய், தைரியமாய் இருக்கீங்க, எல்லோரும் உங்களை மதிக்கிறாங்க. பின் ஏன் எப்போதும் ஜெபிக்கிறீர்கள்” என்று ராஜூ கேட்டான். அப்பாவும் சிரித்துக்கொண்டே தன்னிடமுள்ள துப்பாக்கியை கழற்றி தோட்டாவை எடுத்தார். இதை அந்த பூந்தொட்டியில் போடு என்றார். சரியென்று ராஜூ வும் அப்படியே செய்தான் ஒன்றும் ஆகவில்லை. இதே தோட்டா துப்பாக்கிக்குள் இருந்தால் பவர் அதிகம் இருக்கும் என்பது உனக்கு தெரியும் தானே. நான் ஜெபிக்கும் போது ஜீசஸ் எனக்குள் வந்து விடுகிறார். எனக்கு உதவி செய்கிறார், நான் செய்ய வேண்டிய காரியங்களை கற்றுக் கொடுக்கிறார். துப்பாக்கிக்குள் இருந்தால் தான் தோட்டாவுக்கு பவர் அதிகம். அதுபோல ஜெபம் இயேசுவோடு நம்மை இணைத்து பவர்ஃபுல் மேன் ஆக நம்மை மாற்றிவிடும் என்று அப்பா சொன்னவுடன், நானும் இனிமேல் பவர்ஃபுல் சூப்பர் மேன் என்று சொல்லிக் குதித்தான். ஜெபத்தின் இரகசியத்தை தெரிந்து கொண்டான். 

 

அருமையான குட்டிச் செல்லங்களே! எவ்வளவு மதிப்பு, செல்வம் இருந்தாலும் ஜீசஸ் இல்லையென்றால் ஒன்றுமேயில்லை. எதுவும் இல்லையென்றாலும் ஜீசஸ் மட்டும் இருந்தால் போதும் எதையும் சாதித்து விடலாம். அதற்கு நீ ஜீசஸ் கூட பேசணும் ஓகே வா. 

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet