Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-04.2023
Share:

By Village Missionary Movement

Monday, 24-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 24-04.2023

 

காத்திருக்கும் கடவுள்

 

“அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்” - யோபு 34:21

 

பதின் பருவம் கடந்து இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைத்தேன். அன்றைய காலகட்டத்தில் நற்செய்தி கூட்டங்கள் அதிகம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாத ஊரில் வாழ்ந்து வந்தேன். ஞாயிறு ஆராதனைக்குப் போவதோடு சரி, வாலிபர் கூட்டங்களுக்கு அனுப்ப மாட்டார்கள். வீட்டில் வேதம் வாசித்து ஜெபிப்பேன். திரைப்படம் பார்ப்பது தவறு என யாரும் எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. எப்போதாவது வாய்ப்புக் கிடைக்கும் போது போவேன். “லெந்து நாட்களில் பூ வைக்கக்கூடாது. சினிமாவுக்கு போகக்கூடாது” என வைராக்கியமாய் இருப்பேன். ஒருமுறை என் குடும்ப நண்பரின் மகளோடு சிறந்த இயக்குநரின் ஒரு சினிமாவிற்கு சென்றோம். எங்களால் படத்தைப் பார்க்க முடியவில்லை. “இதற்குப் போய் வந்திருக்கிறோமே” எனப் புலம்பியபடி, தலையைக் குனிந்து, கண்டும் காணாமலும் ஒரு வழியாய் நேரத்தைக் கடத்திவிட்டு வீட்டிற்கு வந்தோம். பெரிய பாவம் செய்தது போல் உணர்ந்தேன். என் பெற்றோர் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆண்டவரிடம் மன்னிப்பு வேண்டினேன். “இனி நான் எனக்காக சினிமாவிற்குப் போக மாட்டேன்” என பொருத்தனை பண்ணினேன்.

 

மாதங்கள் கடந்தது. ஒரு நாள் சோதனை வந்தது. ஆசிரியர் வேலையில் அமர்ந்தேன். பிள்ளைகள் பார்க்கக் கூடிய படம் என்று பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. என்னோடு பணி செய்த சகோதரி “இது ஒரு சர்க்கஸ் படம். அநேக நாடுகளைக் காட்டுகிறார்கள். நாம் அங்கெல்லாம் போக முடியுமா? சும்மா வா!” என்று கூறினார்கள். என் மனதிலும் ஒரு ஆசை “போகலாம்” என எண்ணினேன்.

 

அன்றிரவு ஒரு கனவு கண்டேன். நீண்ட சாலை, வெண்ணங்கி தரித்த ஒருவரோடு நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியிலே ஒரு தியேட்டர் வந்தது. நான் அவரிடம், ”வாங்க நாம் தியேட்டர் போவோம்” என்றேன். அவர், ”நான் வரமாட்டேன். நீ வேண்டுமானால் போ. நீ வரும் வரை உனக்காகக் காத்திருக்கிறேன்” என்றார். நான் அவரைப் பார்த்தேன். “நீங்க வராத இடத்திற்கு நானும் போக மாட்டேன், வாங்க போகலாம்” என்று கூறிவிட்டு அவரோடு நடக்க ஆரம்பித்தேன், விடிந்தது பள்ளிக்கு சென்று நான் “வரமாட்டேன்” என உறுதியாகக் கூறிவிட்டேன். 

 

அன்பான வாலிபரே! நம் ஆண்டவரின் அன்பைப் பாருங்கள் வழிமாறிப் போனாலும் நமக்காக காத்திருக்கும் ஆண்டவர். இளையகுமாரனுக்காக காத்திருந்த தகப்பனைப்போல இன்றும் நமக்காக காத்திருக்கிறார். அவர் அன்பிற்கு நேராய் திருப்புவோமா?

- Mrs. வனஜா பால்ராஜ்   

 

ஜெபக்குறிப்பு:  

வாலிபர் முகாமில் கலந்து கொள்ளுகிற வாலிபர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய கரத்தில் கருவியாக பயன்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş https://tr.holiganbet-30temmuz.art/ çarkbet çarkbet giriş