Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-05.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 04-May-2023

இன்றைய தியானம்(Tamil) 04-05.2023

 

உறுதியான விசுவாசம் 

 

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;..” - எபிரெயர் 11:6

 

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்கிற எபிரெய வாலிபர்கள் நேபுகாத்நேச்சாருக்கு முன்பாக விசுவாசத்துடன் வீர முழக்கமிட்டார்கள். "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவராயிருக்கிறார். விடுவிக்காமற்போனாலும், நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்வதில்லை" என்று தைரியத்துடன் சொன்னார்கள். அவர்கள் விசுவாசம் தேவனுக்குப் பிரியமாக இருந்ததால் எரிகிற அக்கினி சூளையில் மூவருடன் நான்காவது ஆளாக உலாவி வந்தார். விசுவாசம் இல்லாத ஜீவியம் உயிரற்ற வாழ்க்கை.

 

இரத்த சாட்சியாக மரித்த பெலண்டினாவின் சாட்சியை பாருங்கள். இவள் ஒரு அடிமைப்பெண். பெலவீனமான உடலுள்ளவள். ஆனால் அஞ்சா நெஞ்சம் படைத்தவள். இவள் ரோமாபுரியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டாள். காலையிலிருந்து மாலை வரை விக்கிரங்களை வணங்கும்படி வற்புறுத்தினார்கள். அவள் கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தை அறிக்கையிட சிறிதும் தயங்கவில்லை. "நாங்கள் கிறிஸ்துவின் அடியார்கள்" என்று கூறினாள். அவளை விளையாட்டு அரங்கிலுள்ள ஒரு மரத்தூணில் கட்டி, காட்டு மிருகங்களைக் கூண்டிலிருந்து திறந்து விட்டார்கள். தூணில் கட்டப்பட்டவளாய் முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டு இருந்தாள். மிருகங்கள் அவளை முகர்ந்துவிட்டு யாதொரு தீங்கும் செய்யவில்லை. மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு போனார்கள். விளையாட்டுப் பண்டிகையின் கடைசி நாளில் பெலண்டினாவை மீண்டும் அரங்கத்திற்கு கொண்டு வந்தார்கள். அவளை மிலாறுகளினால் அடித்து பழுக்கக் காய்ச்சின இரும்பு நாற்காலியில் அமரச் செய்தார்கள். நூலினால் செய்த வலையில் அவளைப் போட்டு கட்டி காளைகள் தங்கள் கொம்புகளால் குத்தி தூக்கி, அங்கும் இங்கும் எறியச் செய்தார்கள். இறுதியில் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டு, மகிமையோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள். 

 

பிரியமானவர்களே! உங்கள் விசுவாசம் எப்படிப்பட்டது? கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீட்டைப் போல உறுதியாக இருக்கிறதா? அல்லது மணலின் மேல் கட்டப்பட்ட வீட்டைப் போல் நிலையற்று இருக்கிறதா? சிந்திப்பீர். உங்கள் விசுவாசம் கர்த்தருக்குப் பிரியமானதாயிருக்க ஆவியானவர் உங்களை பெலப்படுத்துவாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

- Mrs. ஜெமீமா ராஜாசிங் 

 

ஜெபக்குறிப்பு:

VVBS ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் 3000க்கும் மேற்பட்ட கிராமங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet ibizabet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş