Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10-05.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 10-May-2023

இன்றைய தியானம்(Tamil) 10-05.2023

 

குறைகூறுதல் 

 

“உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் திரியாயாக” – லேவி 19:16

 

அன்று ஆதாம் துவங்கி, இஸ்ரவேல் ஜனங்களைத் தொடர்ந்து, இன்று நம் வரை பிறரைக் குறை கூறுதல் என்பது நம் இரத்தத்தோடு கலந்த ஒரு குணமாகிவிட்டது. பிறரைக் குறித்த குறைவுகளை கேட்க வேண்டுமென்றால் பால்கோவா சாப்பிடுவதைப்போல இனிமையும், அடுத்த வாய் வைப்பதற்குள் நாக்கில் எச்சில் ஊறும் அனுபவமுமாகிவிட்டது. பிறரைக் குறை கூறுவது அவர்களை அற்பமாய் எண்ணுவதற்கு சமமானதாகும். பிறரை குறைகூறுமுன் நம்மிடம் இப்படிப்பட்ட குறைவுகள் காணப்படுகின்றனவா என்று பார்ப்பதில்லை. நம்மிலுள்ள நிறைவுகளை மாத்திரம் பார்த்து குறைவுகளை மறந்து விடுகிறோம். மற்றவர்களிடமுள்ள குறைவுகளை மாத்திரம் பார்த்து அவர்களின் நிறைவுகளை மறந்துவிடும் இயல்புடையவர்களாகவே காணப்படுகிறோம்.

 

ஆனால் வேதம் நமக்குப் போதிப்பது என்னவெனில், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். (பிலி.2:3). உதாரணமாக ஒரு கிராம சபையில் சிறிய உதவி செய்து கொண்டிருக்கிற நபரைக் கண்டு, இவர் என்ன செய்கிறார்? என்று அற்பமாய் எண்ணி அவரது பணியைக் குறை கூற வாய்ப்புண்டு. ஆனால் தேவன் அந்தக் குறிப்பிட்ட உதவியை செய்யும்படி அவரை அங்கு வைத்திருக்கிறார். அந்த பணியை நாம் செய்யவில்லை எனவே அந்த நபரை குறை கூறுவது சரியல்ல.

 

"இயேசுவிடம் வந்த ஐசுவரியவானான வாலிபன் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு துக்கமடைந்தவனாய் போய்விட்டான்; இதே போலத்தான் இன்றைய செல்வந்தர்களும் காணப்படுகிறார்கள்" என அநேக சந்தர்ப்பங்களில் பணக்காரர்களை குறை கூறுகிற நாம், "உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு பின்பு என்னைப் பின்பற்றி வா" என்று இயேசு நம்மிடம் கூறுவாரானால், உண்மையில் நம்மில் எத்தனைபேர் பின்பற்றுவோமோ தெரியாது.

 

பிரியமானவர்களே! பிறரது குறைவுகளைக் கேட்க இவ்வுலகத்தாரைப் போலத் தீவிரப்படவேண்டாம். பிறருடைய குறைவுகளைப் பிரகடனப்படுத்தித் திரியும் குணமும் வேண்டாம். பிறரது தவறுகளை அக்கம் பக்கத்தில் தெளிவாய் விசாரித்து, அவர்களை நமது இருதயத்தில் அற்பமாய் எண்ணும் பாவத்திற்கு இடங்கொடாதிருப்போம். வேதம் கூறுகிறது, “நிற்கிறேன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” (1கொரி.10:12). ஆகவே நம்மில் காணப்படும் சின்னச்சின்ன குறைவுகளையும் அலட்சியம் செய்யாமல் சரி செய்வோம். பிறரை அற்பமாய் எண்ணாமல் நம்மிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணுவோம். இப்படிப்பட்ட சிந்தை நமக்குள் வளருமானால் ஒரு நல்ல ஆவிக்குரிய ஓட்டத்தை ஓடி முடிக்க முடியும். ஆமென். 

- L. அழகர்சாமி 

 

ஜெபக்குறிப்பு:

ஆமென் வில்லேஜ் டிவியின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet ibizabet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş