Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-05.2023
Share:

By Village Missionary Movement

Friday, 12-May-2023

இன்றைய தியானம்(Tamil) 12-05.2023

 

உறுதி மொழி 

  

“நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” - 2 பேதுரு 3:17

 

வேல்ஸ் தேசத்தில் பிரபல பிரசங்கிமாரில் கிறிஸ்மஸ் இவான்ஸ் விசேஷமானவர். இவர் மூலம் வேல்ஸ் தேசத்தில் பெரிய எழுப்புதல் உண்டானது. இவர் மனந்திரும்பியதைக் கண்ட இவருடைய பழைய துஷ்ட நண்பர்கள் இவரைப் பிடித்து அடித்து வதை செய்தபோது ஒரு கண் பார்வையை இழந்து விட்டார். இவர் ஆங்கில்ஸே என்ற தீவில் 2 வருடம் ஊழியம் செய்தார். ஆனால் பின்நாட்களில் பின்மாற்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். அவரது ஆவிக்குரிய வாழ்வு குளிர்ந்து விட்டது. வேதவாசிப்பு, ஜெபம், போதனை எல்லாம் குறைந்து விட்டது. இந்நிலையில் ஒருநாள் ஆவியானவர் இவருடன் பலமாய் இடைப்பட்டார். இந்த அனுபவத்திற்கு பின் "தேவனோடு உடன்படிக்கை" என்ற தலைப்பில் கீழ்கண்ட உறுதிமொழிகளை எழுதி, அவை ஒவ்வொன்றின் கீழும் கையெழுத்திட்டார். அவை பின்வருமாறு: 

 

1. நான் என் ஆத்துமாவையும், சரீரத்தையும் இயேசு கிறிஸ்துவே உமக்குத் தருகிறேன். பாவத்திலிருந்தும், நித்திய மரணத்திலிருந்தும் என்னை விடுவித்து நித்திய ஜீவனுக்குள் என்னைக் கொண்டுவாரும். ஆமென் .

 

2. நான் உம்மை முழுமனதோடு நேசிக்க எனக்கு விருத்தசேதனமுள்ள இருதயத்தைத் தாரும். உமது நியாயத்தீர்ப்பின்போது நான் வெட்கப்பட்டு மாய்மாலக்காரனாகக் காணப்படாதபடி என்னை ஆண்டு கொள்ளும். ஆமென் .

 

3. என் நேரம், பெலன், ஈவுகள், தாலந்துகள் யாவற்றையும் சபையின் பக்தி விருத்திக்காக நான் ஒப்படைக்கிறேன். ஆமென்.

 .

4. நான் உம்மைக் குறித்து முறுமுறுக்கத்தக்கதாகவும் நீர் காயப்படத்தக்கதாகவும் ஏதாவது இடறல்களுக்குள் விழுந்து விடாமலும், என் சமாதானம் குலையாமல் காக்கப்படவும் கிருபையளியும். ஆமென்.

 

5. உம்மை விட்டு என்னை பாவம் பிரித்துவிடாதபடியும், எவ்விதப் பாவச் செயலாலும் உமது கிருபையை இழந்துவிடாதபடியும், என் வாழ்க்கை முடியுமுன் உபயோகமற்றுப் போகாதபடி காத்துக் கொள்ளும். ஆமென்.

 

6. என்னை ஆராயும், நித்திய நியாயத் தீர்ப்பு வரும்போது நான் வேறு மாதிரியாய் காணப்படாதபடி, உமது பார்வையில் எப்படிக் காணப்படுகிறேனோ அவ்விதமாகவே நான் என்னைக் காண அருள் புரியும். நீர் என்னைப்பற்றி எண்ணியிருப்பதைவிட நான் மிஞ்சி எண்ணிவிடாதபடி அருள் புரியும். ஆமென் .

 

7. ஆகாயத்துப் பறவையைப் போஷிப்பது போலும், காட்டு புஷ்பத்தை உடுத்துவிப்பது போலுமல்ல. உம் குடும்பத்தின் பிள்ளையைப் போஷிப்பதுபோல அபாத்திரனான என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.

 

கிறிஸ்மஸ் இவான்ஸின் இந்த உறுதிமொழிகளை நாமும் இன்றைய நாளில் ஏற்போம்.

- S. ஜெயக்குமாரி 

 

ஜெபக்குறிப்பு:

ஆமென் வில்லேஜ் டிவிக்கு மீடியாவில் பணி செய்ய அனுபவமுள்ள அர்ப்பணிக்கப்பட்ட நபர்கள் இணைந்து செயல்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet