By Village Missionary Movement
Monday, 15-May-2023இன்றைய தியானம்(Tamil) 15-05.2023
நோ (No)
“ஸ்திரீயுடனே விபச்சாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்: அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவை கெடுத்துப் போடுகிறான்” - நீதி.6:32
விலையேறப்பெற்ற வாலிபரே! திருமணத்திற்கு முன் பாலுறவு என்பது ஒரு தவறான காரியமாகும். இது நம் வாழ்க்கையையே பாழாக்கிவிடும். திருமணத்திற்கு முன் பாலுறவு கூடாது என்பதற்கு அருமையான காரணங்களை காண்போம்.
1. திருமணத்திற்கு முன்பும், திருமண உறவிற்கு வெளியிலும் பாலுறவு கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறார் (யாத். 20:14) மாறாக திருமணம் என்ற உறவுக்குள் அதை அவரே வைத்துள்ளார்.
2. திருமணத்திற்கு முன் பாலுறவு வேண்டாம் என்று நீங்கள் தீர்மானிக்கும் போது பல வகையான குற்ற உணர்வுகள், ஏமாற்றங்கள், கவலையிலிருந்து உங்களை காத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் மதிப்பு மரியாதையை பிறர் ஏளனப்படுத்தும்படி நடந்துவிடாதீர்கள்.
3. திருமணத்திற்கு முன் இந்த காரியத்தில் ஈடுபடும் போது நீங்கள் நேசிக்கப்படுவதில்லை, மாறாக பயன்படுத்தப்படுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
4. வாலிப சகோதரிகளே, திருமணத்துக்கு முன் தவறான உறவினால் முறையற்ற குழந்தையை நீ கருத்தரிக்க நேரிடும். இதனால் சமுதாயத்தில் உனக்கு பெரிய அவமானம் நேரிடும். கருச்சிதைவு செய்வது ஒரு கொலை. அதுவும் உயிருக்கு ஆபத்து.
5. திருமணத்திற்கு முன் இப்பாவச்செயல் வேண்டாம் என்று தீர்மானிக்கும் போது குணமாக்க முடியாத உயிர்கொல்லி நோயாகிய எய்ட்ஸ்-ல் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
6. திருமணத்திற்கு முன் பாலுறவு எதிர்காலத்தை பாதிக்கும். உங்கள் மேற்படிப்பு நிறுத்தப்படலாம், நல்ல வேலை வாய்ப்புகளை இழக்கலாம்.
7. திருமணத்திற்கு முன் பாலுறவில் ஈடுபடும்போது தேவன்
உங்களுக்கென்று முன் குறித்த வாழ்க்கைத் துணையை இழப்பீர்கள்.
இதை வாசிக்கும் திருமணமான நண்பர்களே மேற்கண்ட ஆலோசனைகள் உங்களுக்கும் உரித்தானவைகளே!
- ஜூன் கார்லேண்ட்
ஜெபக்குறிப்பு:
VVBS ஊழியங்களுக்கு தன்னார்வமாய் வருகின்ற வாலிபர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864