By Village Missionary Movement
Friday, 19-May-2023இன்றைய தியானம்(Tamil) 19-05.2023
வெற்றிடம்
“…உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாய் இருக்கும்” - லூக்கா 19:42
டாக்டரிடம் ஒரு மனிதன் சென்றான். அவனிடம் பேசிய டாக்டர் "உங்களுக்கு பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனாலும் ஒரு சில டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டால் திருப்தியாகிவிடும்" என்றார். டெஸ்ட் முடிவுகள் வந்தன. அவரது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெளிவானது. அந்த மனிதன் டாக்டரிடம், ஒரு வியாதியும் இல்லை என்கிறீர்கள். இருந்தாலும் ஏதோ, ஒரு சோர்வு எனக்குள் ஏற்பட்டு என்னை முற்றிலும் செயல்படமுடியாமல் செய்கிறது” என்றார். தீர விசாரித்துவிட்டு டாக்டர் கூறினார், "உங்களுக்கு மனக்கவலை தான் இருக்கிறது அதற்கு எங்களிடம் மருந்து இல்லை, ஒன்று செய்யுங்கள், எங்கள் மருத்துவமனைக்கு அருகில் சர்க்கஸ் போடுகிறார்கள், அங்கு ஒரு கோமாளி இருக்கிறான். அவன் தனது வேடிக்கையான செய்கையினால் மற்றவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விடுவான். ஆகவே அங்கு சென்றால் உங்களது மனதில் பாரங்கள் குறையும்" என்று ஆலோசனை கூறினார். அம்மனிதன் டாக்டரைப் பார்த்து கண்ணீர் வடித்தான். "அந்த கோமாளியே நான் தான்" என்றான்.
இதை வாசிக்கிற நாம் கூட நம்முடைய பேச்சினாலும் செயலினாலும் அநேகரை மகிழ்விக்கலாம். நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். அதனால் நம்மை சுற்றி ஒரு பெரிய கும்பலே காணப்படலாம். ஆனால் நம் உள்ளத்திலோ ஒரு வெறுமை, வெற்றிடம் காணப்படுவதை நம்மால் மட்டுமே உணர முடியும். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறான். ஒருவர் நினைக்கலாம்: என் வாழ்க்கைக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டால் எனக்கு கவலையே இல்லை என்று! மற்றொருவர் எனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்றால் என் மனபாரமெல்லாம் தீர்ந்துவிடும் என எண்ணலாம். இன்னும் சிலர் படிப்பு, பதவி, உயர்வு, அந்தஸ்து, நல்ல குடும்பம் என எதோ ஒன்றினால் மனநிறைவு பெற்றுவிடலாம் என எண்ணலாம்.
ஆனால், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வெற்றிடம் உண்டு. அதை இயேசு கிறிஸ்துவாகிய உண்மை தெய்வத்தை தவிர வேறு யாரும், எதுவும் நிரப்ப முடியாது. திடீரென்று உங்களுக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் கிடைத்தாலும் அது அந்த வெற்றிடத்தை நிரப்பி உங்களுக்கு சமாதானத்தைத் தர முடியாது. ஆகவே இன்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் உங்கள் உள்ளத்தில் இருக்கும் போது உலகப் பிரகாரமாக வாழ்வில் குறைவுகள் வந்தாலும், நீங்கள் மகிழ்ச்சியாய் மனநிறைவோடு சமாதானமாய் இருப்பீர்கள். அவர் உங்கள் உள்ளத்தில் வர ஆயத்தம். நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆயத்தமா?
- K. முத்துலெட்சுமி
ஜெபக்குறிப்பு:
பைபிள் காலேஜிற்கு வருகிற ஜூன் மாதம் புதிய வகுப்பிற்கு முன்குறிக்கப்பட்ட நபர்களை தேவனே அழைத்து வர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864