Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-05.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 24-May-2023

இன்றைய தியானம்(Tamil) 24-05.2023

 

கிறிஸ்துவின் சாயல் 

 

"…தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்" - யாக்கோபு 1:24 

 

வாலிபர்கள் மத்தியில் பகுதி நேரமாக ஊழியம் செய்யும் ஒரு சகோதரர் மற்றவர்களிடம் பழகும்போது கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலித்து வாழப் பிரயாசமெடுப்பார். ஒருமுறை, அவரது காரை ரிப்பேர் செய்ய வேண்டிவந்தது. வழக்கமாகச் செல்லும் கடையின் மெக்கானிக் ஊரில் இல்லாதபடியால் ஒரு புதிய கடைக்குச் சென்று காரை ரிப்பேர் செய்து தரும்படி மெக்கானிக்கிடம் கூறினார். அவர் நிமிர்நது கூட பார்க்காமல் அலட்சியமாய் சாவியை வாங்கி "சரி, சரி, உடனே முடியாது. நாளை பார்க்கலாம்" என்று கூறினார். மறுநாள் சென்றபோது சரியான பதிலைக் கூறாமல் அடுத்தநாள் வரும்படி கூறினார். அந்த ஊழியர் தன் நண்பரிடம் அந்த மெக்கானிக் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றி கூறினார். அதற்கு நண்பர் "இப்படி அமைதியாய் இருந்தால் அவன் அப்படித்தான் பேசுவான், கடினமாய் பேசினால் சீக்கிரமாய் வேலையை முடித்துக் கொடுப்பான்" என்று கூறினார்.

 

இருவரும் மறுநாள் போய் அந்த மெக்கானிக்கை நன்கு திட்ட வேண்டுமென்று நினைத்துக் கொண்டு போனார்கள். ஆனால் அவரைப் பார்த்தவுடன் மெக்கானிக் சிரித்துக் கொண்டே சாவியை எடுத்துக் கொடுத்து, "வண்டியை எடுத்து செல்லலாம் சார்" என்றான். மேலும் மெக்கானிக், கொஞ்ச நாட்களுக்கு முன்பதாகத்தான் என் மனைவி கிறிஸ்தவளாக மாறினாள். என்னையும் ஆலயத்திற்கு வரும்படி அழைக்கிறாள். உங்கள் காரில் வசனத்தைப் பார்த்ததும் நீங்களொரு கிறிஸ்தவர் என்று அறிந்து கொண்டேன். ஆம், உண்மையிலேயே என் மனைவி கூறிய பொறுமையை உங்களிடம் கண்டேன், நானும் ஒரு கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறேன் என்றார். காரில் அமர்ந்த தேவ மனிதர் "ஆண்டவரே, என்னை மன்னியும்! நான் என் கோபத்தையும், கடின வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்தியிருந்தால் அவர் உம்மிடம் வருவது தடைபட்டிருக்குமே எந்த சூழ்நிலையிலும் நான் உம்மை பிரதிபலிக்க உதவி செய்யும்" என்று ஜெபித்து கடந்து சென்றார்.

 

ஆம், பிரியமானவர்களே! நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். எனவே கிறிஸ்துவின் சாயல் நம்மில் வெளிப்பட வேண்டும். இவ்வுலகத்திற்கு அதனை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். நம்மைக் காண்கிறவர்கள் நமக்குள் இருக்கிற இயேசுவை காணவேண்டும். நம்முடைய வாழ்க்கையும் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் நற்கந்தமுள்ள வாழ்க்கையாக இருக்கணும். நம்முடைய காரியங்கள் இயேசுவை வெளிப்படுத்த கூடியதாகவும், பிறரை ஆண்டவரண்டை வழிநடத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும். இன்றே சிந்திப்போம்! இயேசுவைப் பிரதிபலிப்போம்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:   

திங்கட்கிழமை தோறும் நடைபெறும் முழுஇரவு ஜெபத்தில் தேவன் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet