Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09-06.2023
Share:

By Village Missionary Movement

Friday, 09-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 09-06.2023

 

ஓய்வு இங்கு இல்லை 

 

"ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் 

சிலம்பம் பண்ணேன்." – 1 கொரி 9:26

 

சாதனையாளராக எவரும் பிறப்பதில்லை. ஆனால் சாதனையாளராக உருவாகியோர் இவ்வுலகில் பலரும் உண்டு. மேகம் போன்ற திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் போது, அதில் ஒரு சாட்சியைத்தான் இன்று பார்க்கப்போகிறோம். அவர்தான் ஹென்றி பிரான்சிஸ். அவருக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தபோதும் தேவனுடைய அழைப்பை உணர்ந்து இறையியல் கல்லூரியில் பயின்றார். "என்னோடிரும், என் நேச கர்த்தரே ...." என்ற பாடலை இயற்றியவரும் அவரே! காலமெல்லாம் காசநோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், விசுவாசத்திலும், ஆவியிலும் மிக உறுதியுடன் ஆண்டவருக்கென்று தன்னை வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார். அவர் உதடுகள் அடிக்கடி சொல்லும் ஓர் வாக்கியம் "உலகத்திற்காக துருப்பிடித்து கெட்டு அழிந்து போவதைவிட, கர்த்தருடைய பணியைச் செய்து களைப்படைவது மேலானது". இவ்வாக்கியம் நம்மையும் உயிர்ப்பிக்கச் செய்கிறது அல்லவா?

 

அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையிலும் பெலவீனங்கள் இருந்தன. அதனை பொருட்படுத்தாமல் தேவனுடைய கிருபையை சார்ந்து அநேகமுறை கப்பற்பிரயாணம் செய்து, பிரயாசம், வருத்தம், அநேகமுறை கண்விழிப்பு, பசி, தாகம், உபவாசம், குளிர், என அவர் பட்டபாடுகளின் பட்டியல் மிக நீண்டதாய் செல்கிறது. கிறிஸ்துவுக்காக அவர் ஓடிய ஓட்டம் பெரியது. தன்னுடைய ஜீவன் பிரியும் மட்டும் அவர் கிறிஸ்துவுக்காக தொடர்ந்து ஓடினார். இயேசுவின் அன்பு அவரை நெருக்கி ஏவியது. அவரது ஓய்வு பூமியில் இல்லை என்பதனை உணர்ந்தவராய் பரம அழைப்பின் பந்தயப் பொருளை அடையும் மட்டும் அவர் அமர்ந்திருக்கவில்லை.

 

ஆம், எனக்கன்பானவர்களே, சரீர பெலவீனத்திலும் ஆண்டவருக்கென களைப்படையாமல் ஓடிய ஹென்றி மற்றும் பவுல் போன்ற தேவபிள்ளைகளின் வாழ்க்கை நமக்கு கற்று கொடுப்பது ஒன்று மட்டும் தான். ஓய்ந்து இருக்காதீர்கள். ஆண்டவருக்காக ஏதாவது செய்யுங்கள் என்று! இதனை நன்கு உணர்ந்த அப்.பவுல் கூட "நிச்சயமில்லாதவனாக ஓடேன்" (1 கொரி. 9:26) எனக் கூறி தன்னுடைய ஓட்டத்தை ஜெயமாக ஓடி முடித்தார். "எங்கள் ஓய்வு சொர்க்கத்தில் உள்ளது, இங்கே இல்லை" உங்கள் அறிக்கை என்ன?

- Mrs.மஞ்சுளா 

 

ஜெபக்குறிப்பு 

தமிழ்நாட்டில் நமது ஊழியத்தின் மூலம் தேவையுள்ள ஆயிரம் இடங்களில் ஆயிரம் திருச்சபைகள் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş