Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-07.2023
Share:

By Village Missionary Movement

Friday, 07-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 07-07.2023

 

பெருத்த நஷ்டம் 

 

“…உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;…" - எபிரெயர் 13:5

 

ஒரு மனிதன் தன்னுடைய சிறிய படகைக் கொண்டு எளிய முறையில் மீன் பிடித்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுடைய வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கிக்கொண்டது. ஆனால் இந்த சிறிய படகின் மூலம் அந்த பெரிய மீனைக் கரைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம். ஆயினும், பேராசையின் விளைவாக அந்தப் பெரிய மீனை அவன் கரைக்கு கொண்டு வர முயற்சித்தான். அது மிகவும் கடினமாயிருந்தபடியால் நீண்ட நேரம் முயற்சித்து களைத்துப்போனான். இறுதியில் வேறுவழியின்றி அதனை வலையுடன் கடலில் விட்டுவிட்டு உயிர் பிழைக்க கரைவந்து சேர்ந்தான். வழக்கமாகப் பிடிக்கும் கொஞ்சம் மீன்களும் அவனுக்கு அன்று கிடைக்கவில்லை. அவனுடைய தொழில் அன்று முழுவதும் நஷ்டமாயின.

 

தேவதிட்டத்தின்படி, ஆபிரகாமோடு இருந்த லோத்துவின் இருதயத்தில் பெரிய பெரிய ஆசைகள் புகுந்ததால் ஆபிரகாமின் நல்ல உறவை இழந்து போனார் லோத்து. அதன் விளைவாக சொத்து சுகங்களை தக்க வைக்கமுடியாமல் போனதோடு, வாழ்க்கையின் இறுதி நாட்களை மிகுந்த மனவியாகுலத்தோடு முடிக்க நேரிட்டது. ஏவாளின் இருதயத்தில் பிசாசானவன் மிகப்பெரிய ஆசையை நுழையவிட்டான். அவளும் அதை ஏற்றுக்கொண்டாள். இந்த பேராசையே தேவன் அவர்களுக்காக வைத்திருந்த உயர்ந்த ஆசீர்வாதங்களை இழக்கச் செய்தது. ஏவாள் ஆசைப்பட்டதும் நடக்கவில்லை. நன்றாக இயங்கிக்கொண்டிருந்த கேயாசியின் உள்ளத்தில் புகுந்துவிட்ட பொருளாசை அவனுடைய நல்ல நிலைமையை இழக்கச் செய்ததோடு, குஷ்டரோகியாகவும் மாற்றிவிட்டது.  

 

சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையிலும் பெரிய பெரிய ஆசைகளும் பெரிய பெரிய கனவுகளும் இருதயத்தில் புகுந்து நம்மை பாரமாக்கி விடுகின்றன. பெரிய அளவில் ஆசைப்படத் துவங்கியதால் சின்னச்சின்ன ஆசைகளை நிறைவேற்றும் வழியும் தடைப்பட்டுப்போகிறது. உயர்வுகளை குறித்த ஆசைகள் தவறல்ல. ஆனால் அவைகள் பேராசைகளின் முகமூடிகளாக மாறிவிடாதபடி நாம் கவனமாயிருப்போம். வேதம் கூறுகிறபடி போதுமென்ற மனதுடன், இருக்கும் இடத்தில் திருப்தியாய் வாழ்வோம்.

 

பணம் அவசியம்தான். ஆனால் பணம்தான் வாழ்க்கையின் பாதுகாப்பு எல்லாம் என்று எண்ணும்போது அநேக பாவங்களுக்கு வழிவகுக்கிறது. மேலேயுள்ள வசனத்தில் போதுமென்ற மனதோடு இருங்கள் என்று மட்டும் சொல்லாமல், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை என்ற வாக்குத்தத்தமும் இருக்கிறது. ஆம், பணமல்ல தேவனே நம்முடைய வாழ்க்கையின் நம்பிக்கை நங்கூரமாய் இருக்கட்டும்.

- Mrs. ரூபி அருண்  

 

ஜெபக்குறிப்பு: 

இராக்லாண்ட் வேதாகம கல்லூரியில் இணைந்துள்ள மாணவர்களுக்காக ஜெபியுங்கள் .

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino