Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-07.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 19-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 19-07.2023

 

முதியோரை கனம் பண்ணுங்கள் 

 

"…நரை மயிரானது மகிமையான கிரீடம்" - நீதி 16:31

 

திருமதி. ஸ்டேக் தங்கியிருந்த ஒரு நர்சிங் ஹோமில் தான் கிளாரியின் தாயாரும் இருந்தார்கள். கிளாரி தன் தாயாரை பார்க்க வரும்போதெல்லாம், திருமதி. ஸ்டேக் மிக வாஞ்சையோடு அந்த ஹாலில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு வருவோர், போவோரையும் பார்த்து யாராவது என்னோடு அமர்ந்து பேச மாட்டார்களா? என்று ஏக்கத்தோடு பார்ப்பார்கள். கிளாரி ஹலோ! என்று அத்தாயாரிடம் கையசைத்து விட்டு கடந்து சென்று விடுவாள். அந்த தாயார் தனிமையில் மறக்கப்பட்டவளாய் இருந்ததை அறிந்து, தனது கருணையற்ற நடத்தையை கண்டு வருந்தி ஒருநாள் அவளருகே அமர்ந்து பேசினாள்.

 

 பேச ஆரம்பித்தவுடன் ஆசள. ஸ்டேக் தான் சிறுபிள்ளையாய் ஜெர்மனியில் வசித்ததையும், திருமணமாகி இளம் மணப்பெண்ணாக அமெரிக்கா வந்ததையும், கண்களில் புது உற்சாகத்தோடு விவரித்தார்கள். தான் பியானோ வாசித்த அரங்கம் பற்றியும், சிறப்புகள் பற்றியும் உற்சாகமாய் பேசினார்கள். கிளாரி தொடர்ந்து அனுதினமும் அந்த தாயரோடு பேசி மகிழ்வித்தாள். தன்னுடைய வாழ்க்கையில் மனமடிவுகள் ஏற்பட்ட போதெல்லாம் எப்படி தேவன் ஆதரவாக இருந்தார் என்று சாட்சி சொன்னபோது கிளாரி கண்ணீர் விட்டாள் .

 

கிளாரி அந்த தாயாருக்கு தான் பேசுவது ஆறுதல் அளிக்கும் என நினைத்தாள். ஆனால் திருமதி. ஸ்டேக்கிடமிருந்து பல அரிய காரியங்களைக் கற்றுக் கொண்டாள். ஒவ்வொரு வயதானவர்களும் அநேக அற்புதமான வாழ்க்கைக் குறிப்புகள், வரலாற்று சம்பவங்கள் போன்ற எங்கும் கண்டுபிடிக்க முடியாதவைகள் அடங்கிய பெட்டகங்கள் என உணர்ந்தாள். 

 

அன்பானவர்களே! வயதானவர்களை புறக்கணித்துத் தள்ளுகிற ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னொரு காலத்தில் என ஆரம்பித்து கதை சொல்பவர்கள் என்று கேலி பேசி சிரிக்கிறோம். முதியோரை இகழ்ச்சியாய் பேசாதே என வேதம் சொல்கிறது. அவர்கள் மேல் தேவன் கரிசனை கொண்டுள்ளார். குடும்பத்திலுள்ள முதியோரை கனம் பண்ணி, அவசரமான வேலைகள் மத்தியில் சிறிது நேரம் அவர்களுக்கென்று ஒதுக்க வேண்டும். அப்பொழுது நாம் பல அற்புதமான, விலைமதிப்பற்ற நடைமுறை செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

 

ஜெபம் : சர்வ வல்லவரே முதியோரை இகழாமலும், அவர்களை உதறித் தள்ளாமலும் இருக்க உதவி செய்யும். அவர்களின் கடந்த கால அனுபவத்தை கவனமாய் கேட்டு கற்றுக்கொள்ள உதவும். ஆமென்.

- Mrs. ஜாஸ்மின் பால் 

 

ஜெபக்குறிப்பு|:  

7000 மிஷனெரிகள் ஒரு லட்சம் கிராமங்கள் என்ற இலக்கை அடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino