Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20-07.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 20-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 20-07.2023

 

இயேசுவுக்காக.. 

 

"பலவீனரை ஆதாயப்படுத்திகொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்” - 1 கொரி 9:22

 

சதர்ன் பேக்டர் செமினரியில் விரிவுரையாளராக இருந்தவர் போதகர் ராபர்ட் ஸ்மித். அவருடைய வகுப்பில் இறையியல் படித்த ஒரு மாணவி ஆப்பிரிக்க தேசத்திற்கு மிஷனெரியாகவும் நல்லுறவை வலுப்படுத்தவும் சென்றார். அவள் அங்கு சென்றிருந்த போது ஒருநாள் சாப்பிடும் வேளை வந்தது. அவர்கள் தனக்கு ஒரு தனித்தட்டு தருவார்கள் என்று நினைத்தார். ஆனால் அப்படி கொடுக்கவில்லை. அவர்கள் மேஜை மீது மிகப்பெரிய ஒரு பாத்திரத்தை கொண்டு வந்தார்கள். அதற்கு கம்யூனிட்டி பாத்திரம் என்று பெயர். எல்லோரும் அந்த பாத்திரத்தில் கையை விட்டு எடுத்துச் சாப்பிட்டார்கள். இந்த மிஷனெரி மிகவும் நாகரீகம் நிறைந்த கலாச்சாரத்தில் இருந்து வந்ததால் அந்தப் பாத்திரத்தில் கையை விட்டு சாப்பிட பயந்தாள். மேலும் அதில் சாப்பிட்டவர்கள் யாரும் கை கழுவி சாப்பிடவில்லை. அந்த மிஷனெரிக்கு பாத்திரத்தில் என்ன சாப்பாடு இருக்கிறது என்று கூட தெரியவில்லை. ஆனால் அவளுக்கு புரிந்தது ஆப்பிரிக்க மக்களுக்கு தான் பிரசங்கம் செய்து அவர்களுக்கு இயேசுவின் அன்பை அறிவிக்க வேண்டும் என்றால் தான் கண்டிப்பாக இந்த பாத்திரத்தில் கைவிட்டு சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று புரிந்து கொண்டாள்.

 

உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன் என்று ஏசாயா 43:4 ல் வாசிக்கின்றோம். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்று இயேசு கூறினார்.(யோவான் 12:24) சுவிசேஷ ஊழியத்தில் நாம் ஜீவனை கொடுக்கும் அளவுக்கு ஊழியம் செய்கிறோமோ இல்லையோ? ஆனால் நாம் சிறுசிறு தியாகங்களை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். அது நமக்குப் பிடிக்காத அல்லது சகிக்க முடியாத விஷயமாக காணப்படலாம். ஆனால் சுவிசேஷத்தினிமித்தம் சில காரியங்களில் விட்டுக் கொடுத்துப் போகுதல் அவசியமாக உள்ளது.

 

ஆத்தும ஆதாயம் என்பது சற்று இலகுவான பாதை. ஆனால் அதில் கடினமான பிரயாசங்களும் உள்ளடங்கியுள்ளது. ஒரு நபரை கிறிஸ்துவுக்குள் கொண்டு வருவதற்கு அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே அதில் பலனைக் காண முடியும். சமாரிய பெண்ணிற்கு சுவிசேஷம் சொல்லும் போது இயேசுவானவர் தனக்கிருந்த தாகத்தையும், பசியையும் தாங்கிக் கொண்டுதான் சுவிசேஷத்தை அறிவித்தார். சுயவெறுப்பும், கடினமான பிரயாசமும் இருந்தால் மட்டுமே நமது ஊழியங்களில் நல்ல பலனை காண முடியும்.

- Bro. ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு: 

திருச்சியில் நடைபெறும் எழுப்புதல் மைய கட்டுமானப் பணிகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet