Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  17-03-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 17-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  17-03-2021

மீட்பின் கயிறு

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை.... தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” – யோவான் 3:16

ஒரு பிரசங்கியார் தனது பிரசங்கத்தை ஒரு உண்மை சம்பவத்தோடு ஆரம்பித்தார். ஒரு தகப்பனார் அவருடைய மகன் மற்றும் நண்பன் ஒருவருடன் கடலில் படகு ஒன்றில் உல்லாசப் பயணம் சென்றனர். அப்போது திடீரென பெரும்புயல் அடித்து கடல் கொந்தளிக்க அவர்களுடைய படகை மிகப்பெரிய அலைகள் தொடர்ந்து தாக்கின. படகு ஓட்டுவதில் தகப்பனார் கைதேர்ந்தவர்தான், ஆனாலும் ஒரு பெரிய அலை அடித்ததில் படகு கவிழ்ந்தது, தகப்பனாரின் கண் முன்பாக மகனும் அவருடைய நண்பரும் கடலில் தூக்கி எறியப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த தகப்பனார் மிகவும் கஷ்டப்பட்டுப் படகிலிருந்த ஒரு கயிற்றை எடுத்து அதின் ஒரு முனையை யாரை நோக்கி வீசலாம் என யோசித்தார். தாமதித்தால் இருவரும் மரித்து விடுவார்கள். மகன் இரட்சிக்கப்பட்டவன், நண்பனோ இரட்சிக்கப்படாதவன், சடுதியாய் ஒரு முடிவெடுத்தார்.  மகனே உன்னை நான் நேசிக்கிறேன் என கத்திக்கொண்டே தன் நண்பனை நோக்கி கயிற்றை வீசினார். நண்பர் காப்பாற்றப்பட்டார். மகனோ கடலில் மூழ்கி மரித்தான். 

பரிசுத்த வேதாகமத்தின் மையக்கருத்து என்னவென்றால், பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்தில் அனுப்பினார். அவர்தான் இயேசுகிறிஸ்து!   மனுக்குலத்தின் பாவங்களை மன்னிக்கும் பொருட்டு பிதாவாகிய தேவன் தமது செல்ல குமாரனை பாடுகளுக்கு உட்படுத்தி சிலுவையில் அடிக்கப்பட சித்தங்கொண்டார். தேவனின் அன்பு இது தான். மனித குலத்தை மீட்க தேவன் வைத்திருந்த திட்டமும் இதுதான். 

இதை வாசிக்கின்ற நண்பர்களே! தேவனின் மீட்பு திட்டத்தை அறிந்திருக்கிற நாம், இந்த நற்செய்தியை உலகமெங்கிலும் கொண்டு செல்வதில் உற்சாகம் அடைவோம். படகோட்டியான அந்த தகப்பனார் தன் நண்பன் காப்பாற்றப்படுவதற்காக மகனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவன் நம் ஒவ்வொருவரின் பாவத்தை மன்னிக்கும் பொருட்டு குமாரனை சிலுவையில் மரிக்க ஒப்புக்கொடுத்தார். இதை புரிந்துகொண்டு நாம் தேவனுக்காய் வாழுவோம். தேவனுடைய அன்பை உலகத்திற்கு எடுத்து செல்வோம், எடுத்து சொல்வோம்! 
-    D. ஜேக்கப் ஸ்மித்

ஜெபக்குறிப்பு:
ஆந்திராவில் உள்ள ரகுமண்டா கிராமத்தில் விரைவில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet