Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-08.2023
Share:

By Village Missionary Movement

Friday, 04-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 05-08.2023

 

மணிப்பூர் 

 

"இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்;…" - மத்தேயு 4:15

 

இந்தியாவின் சிறிய மாநிலம் மணிப்பூர். 1972 - ம் ஆண்டு ஜனவரி 21 - ம் நாள் அரசு அங்கீகாரத்துடன் மணிப்பூர் மாநிலம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் மைத்யி, நாகா, குட்கி-சின்-மிசோ இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களிடையே மணிப்பூரி மொழி பேசப்படுகிறது. இங்கு விதைக்கப்பட்டதான சுவிசேஷம், போர் புரிகிற பழங்குடியினரை அமைதியை விரும்பும் விசுவாசிகளாக மாற்றியது.

 

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மணிப்பூருக்கு இரண்டு பக்கங்களிலிருந்தும் சென்றடைந்தது. ஒன்று வடக்கிலிருந்து முக்கியமாக நாகா பழங்குடியினரை கவர்ந்தது. மற்றொன்று தெற்கிலிருந்து மிசோராம் வழியாக முக்கியமாக குட்கி-சின்-மிசோ பழங்குடியினரை சென்றடைந்தது. 1894ம் ஆண்டு வில்லியம் பெட்டிக் யூ என்ற மிஷனெரி மணிப்பூர் தலைநகரமான இம்பாலுக்கு வந்து முதன்முறையாக அங்குள்ள மலைவாசி மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார். அங்குள்ள சிறுவர்களுக்கென ஒரு பள்ளியையும் தொடங்கினார். கல்விப் பணியோடு கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைத்தார். உக்ரூல் (Ukhrul) என்ற இடத்தில் தனது மிஷனெரி பணியை தொடங்கினார். ஆறுவருட நீண்ட அயராத முயற்சிக்குப் பிறகு அவருடைய 12 மாணவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர். 1926 -ல் டேங்குல் இன மொழி பேசும் மக்கள் மத்தியில் ஆங்கில வேதாகமத்தை மொழி பெயர்த்து பொங்கியோ மொழியில் அச்சடிப்பதற்கு முக்கிய காரணமாயிருந்தார். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளில் இங்கு கிறிஸ்தவ மிஷனெரி பணி வளர தொடங்கியது.

 

இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் 41% கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படியாக சுவிசேஷம் பரவி வாழும் இந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய கலவரத்தைக் குறித்து நிச்சயம் கேள்விப்பட்டு இருப்போம். இன்றைய இளம் தலைமுறையினர் இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய நாம் ஜெபிப்போம். என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லா, ஆக்கில்லாவும் (ரோமர் 16:3) என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் என்று பவுல் அவர்களை குறித்து சாட்சி பகர்வது போல நாமும் இப்படிப்பட்ட கடினமான பகுதிகளுக்குச் சென்று பரமதேவனின் நற்சான்றைப் பெற்றிடுவோம். மணிப்பூரின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்திற்காகவும் ஜெபிப்பது நம் கடமையல்லவா?

- Bro. பாக்கியநாதன் 

 

ஜெபக்குறிப்பு 

திருநெல்வேலி வாலிபர் எழுப்புதல் முகாமின் ஆயத்த வேலைகளில் அநேகர் கண்களில் தேவதயவு கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking casibom giriş perabet padişahbet padişahbet giriş holiganbet matbet perabet perabet giriş instagram ban service pashagaming pashagaming giris gorabet gorabet giris grandpashabet çarkbet çarkbet giriş deneme bonusu casibom giriş casibom vaycasino vaycasino giriş casibom meritking casibom casibom giriş meritking meritking giriş holiganbet jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet grandpashabet grandpashabet grandpashabet cratosroyalbet