Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-08.2023
Share:

By Village Missionary Movement

Monday, 07-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 07-08.2023

 

வங்காளம்

 

"…நீங்கள்உலகமெங்கும் போய், சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்" - மாற்கு 16:15

 

கிறிஸ்துவுக்காக விதைக்கப்பட்ட கோதுமை மணிகளில் ஒருவராகிய வில்லியம் கேரி அவர்கள் வங்காள தேசத்தின் எழுப்புதலுக்காக செய்த பணி அளப்பரியது. இங்கிலாந்தில் பிறந்த இவர் பல மொழிகளில் புலமை பெற்று, போதகராகவும் இருந்து ஆண்டவரின் அழைப்பிற்கு இணங்கி, தன்னுடைய மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் டெனிஷ் கப்பலில் கல்கத்தா வந்து சேர்ந்தார்கள். தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் நம் பாரத பூமிக்கு காணிக்கையாக வைத்தார்கள். அவர் மீண்டும் தாயகம் திரும்பவே இல்லை.

 

புதிய மண், புதிய தட்பவெப்ப சூழ்நிலை, புதிய பழக்கவழக்கங்கள், புதிய மொழி இத்தகைய நிலையில் வங்காள மொழியை கற்று நற்செய்தி பணியை தொடங்க விரும்பினார். மால்டா என்ற இடத்தில் ஒரு சணல் தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டே வங்காள மொழியையும் மராத்தி, சமஸ்கிருத மொழியையும் கற்றார்.  

 

1800 ம் ஆண்டு வில்லியம்கேரி, வில்லியம் வார்ட், யோசுவா மார்ஸ்மேன் ஆகியோர் டெனிஷ் குடியேற்ற நகரமாகிய செராம்பூர் என்ற இடத்திலிருந்து நற்செய்தி பணியை தொடங்கினர். பின்நாட்களில் தன் மனைவியும், உடல்நலக்குறைவால் தன் குழந்தையும் இறந்த பின்னும் நற்செய்தி பணியையும், கல்வி பணியையும் தொடர்ந்தார். 1801ஆம் ஆண்டு புதிய ஏற்பாட்டை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். இதனை அச்சிடும் பணியில் வில்லியம் வார்டு, யோசுவா மார்ஸ்மேன் மற்றும் அவரது துணைவியார் அன்னாள் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். தீனாஜ்பூரில் 40 மாணவர்களை கொண்டு கல்வி சாலை தொடங்கினர். அவர்கள் ஆரம்பித்த செராம்பூர் கல்வி நிலையம் பல்கலைகழகமாக மாறியது. அகில உலக திருச்சபை மன்றங்களுக்கு வித்திட்டவர் இவர். இந்திய சமுதாய சீர்திருத்த பணியிலும் ஈடுபட்டு, "உடன்கட்டை ஏறுதல்", (சதி) என்ற கொடிய தீய பழக்கத்தை நிறுத்த காரணமாய் இருந்தார். "இயேசு கிறிஸ்து மேல்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து நாட்டவருக்கும் பொதுவானவர்" என்ற உண்மைக்கேற்ப வங்காள மொழியில் அவர் பேசிய வார்த்தைகள் புற மதத்தவர்களை அவர் பக்கமாய் ஈர்த்தது. பல மொழிகளை கற்று அந்தந்த மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்ப்பதே அவரது நோக்கமாயிருந்தது. அரும்பாடுபட்டு மொழி பெயர்த்த பிரதிகள் மற்றும் அச்சு கூடம் தீக்கிரையாகியது. மனம் தளராமல் மீண்டும் மொழி பெயர்ப்பு வேலைகளை தொடங்கினார். வேதத்தை கற்க கல்வி அறிவு தேவை என உணர்ந்து ஆரம்ப கல்வியில் ஆரம்பித்த பயணம் பல்கலைக்கழகமாய் வளர்ந்தேறியது. இவ்வாறாக இவர்கள் விதைத்த விதைகள் வங்காள தேசத்தில் அவர் தேவன்பால் கொண்ட அன்பை பறைசாற்றுகின்றன. “கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார், கடவுளுக்காக பெரிய காரியங்களை சாதிக்கப்பார்” என்பதே அவர் அறைகூவலாக இருந்தது. ஆமென்!

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு: 

திருநெல்வேலி வாலிபர் எழுப்புதல்முகாம் நடைபெறும் மைதானத்தில் தேவனுடைய கிரியை பலமாய் வெளிப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom