By Village Missionary Movement
Thursday, 10-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 11.08.2023
கேரளா
"…ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்" - நீதி. 11:30
நம் ஆண்டவர் தெரிந்து கொண்ட அனைவரும் எவ்விதத்திலாவது ஒரு செய்தியை நமக்கு தெரிவிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையிலும், ஏன் அவர்கள் மரணத்திலும் கூட நமக்கு ஒரு செய்தியை விட்டு சென்றிருக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் 12 சீஷர்களில் விசுவாசத்தில் பெலவீனமானவராயிருந்தவரும் அவரது காயங்களை கண்டபின்பே நம்பினவருமாகிய தோமா நம் இந்திய தேசத்தில் கேரளா மாநிலத்தில் செய்த ஊழியங்களையும் அவருக்கு பின்வந்த மிஷனெரிகள் செய்த ஊழியங்களையும் விரிவாக காண்போமா!
கி.பி. 38-ல் தோமா இந்தியாவிற்கு வந்தார். அவர் கப்பற்பயணம் மேற்கொண்டு கேரளாவின் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். அவ்விடங்களில் இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார். கேரளாவின் அரசர் கொண்டாபாரஸ் அவருக்கு அதிகமான உதவிகள் செய்தார். அங்கு தோமா 7 கிறிஸ்தவ ஆலயங்களை உருவாக்கினார். 15- ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் வந்தபோது அவர்கள் பெரிய அளவில் ஊழியம் செய்தனர். பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டனர். எந்தவித உயர்வு, தாழ்வுமின்றி அனைவரையும் சமமாக நடத்தினார்கள்.
மிஷனெரிகள் நற்செய்தி அறிவிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற சமூக சேவை மையங்களை நிறுவினார்கள். உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவை பெற்றனர். ஹோமியோபதி மருத்துவமுறை கேரளாவிற்கு மிஷனெரிகளால் கொண்டுவரப்பட்டது. பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹென்றி பேக்கர் ஆகியோர் 1813 லிருந்து 1930-ல் கோட்டயத்தில் செயல்பட்ட கிறிஸ்தவ மிஷனெரி சொசைட்டியை (CMS) சேர்ந்தவர்கள். இவர்கள் கோட்டயத்தில் ஒரு இலக்கணப் பள்ளியையும், ஆலப்புழாவில் பெண்கள் பள்ளியையும் நிறுவினர்.
ஹெர்மன் குண்டர்ட் பழைய ஏற்பாட்டை ஹீப்ரு மொழியில் இருந்தும், புதிய ஏற்பாட்டை கிரேக்கத்திலிருந்தும் மலையாளத்தில் மொழி பெயர்த்தார். லண்டன் மிஷன் சொசைட்டி (LMS)யைச் சேர்ந்த Rev. மீட் 1817-1873 திருவிதாங்கூரில் தொழிற்கல்வி பள்ளிகளை தொடங்கினார். அவரது மனைவி பெண்களுக்கான பள்ளிகளைத் தொடங்கினார். இவ்வாறாக கேரளாவில் மிஷனெரிகள் ஊழியம் செய்து எழுப்புதலைக் காணச் செய்தனர்.
இதனை வாசிக்கும் நீங்களும் ஆண்டவர் தெரிந்து கொண்ட பாத்திரம்தான்! அவருக்காக ஏதாவது செய்யுங்களேன்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!!
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு
நமது மீடியா ஊழியங்களில் ஈடுபடும் நபர்களுக்காக ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864