Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.09.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 02-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 03.09.2023

 

உண்மை

 

"…உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்” - நீதிமொழிகள் 12:22

 

ஹாய் குட்டீஸ்! கதை கேட்க ரெடிதானா? கதையை கேட்பது மட்டுமல்ல கதையிலுள்ள நல்ல காரியங்களை நீங்கள் கடைபிடிப்பது தான் ரொம்ப முக்கியம். என்ன குட்டீஸ் ஓகே தானே! உண்மைக்கு கிடைத்த பரிசு என்னவென்று கதை இன்று கேட்கலாமா?

 

சுந்தரம் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்பவர். ஏழ்மை நிலையில் இருந்தாலும் உண்மையாய் இருக்க கூடியவர். அவர் செய்யும் வேலையை சரியாய் செய்து முடிப்பார். ஆனால் இவருக்கு வேலை கிடைப்பதுதான் ரொம்ப கஷ்டம். வருமானம் அதிகம் கிடைக்காததால் நல்ல சாப்பாடு, நல்ல டிரஸ் கிடைப்பதுகூட அரிதாகவே இருக்கும். சுந்தரம் இருந்த ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவர் எப்போதாவது வேலைக்கு கூப்பிடுவார். சுந்தரமும் ரொம்ப சந்தோஷமாக செல்வார். எதுக்கு தெரியுமா? ம்ம் ... கரெக்டா சொல்றீங்களே! பண்ணையார் வீடுன்னா சும்மாவா நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைக்கும் இல்லையா? நம்மை போலதான் சுந்தரமும் நினைத்துக் கொண்டு போனார். பண்ணையார் நதியோரம் அழைத்துச் சென்று இந்த படகுக்கு பெயிண்ட் பண்ணு என்று சொல்லி விட்டு சென்றார். இவ்வளவுதானா என்று நினைத்துக் கொண்டே படகுக்கு பெயிண்ட் பண்ணினார். படகின் நடுவில் ஓட்டையிருந்தது. அந்த ஓட்டையைப் பற்றி கவலைப்படுவது ஒரு பெயிண்டரின் வேலை இல்லை என்றாலும், அந்த ஓட்டையை நன்றாக அடைத்துவிட்டு பெயிண்ட் வேலையை சூப்பராக முடித்து விட்டார்.

 

ஊருக்கு போன படகோட்டி வந்தார். பண்ணையார் குடும்பமாக படகில் பயணம் செய்ய வந்தார்கள். ஐயோ படகில் ஓட்டை இருக்கிறதே நாளைக்கு போகலாமே என்று சொல்லிக்கொண்டே படகோட்டி படகை செக் பண்ணி பார்த்தால் ஓட்டை அடைக்கப்பட்டு நேர்த்தியாக இருந்தது. சுந்தரம் இதை சொல்லாமலே வேலையை சரியாய் செய்து முடித்து விட்டானே என்று நினைத்த பண்ணையார் சுந்தரத்தை தேடி சென்று அதிக சம்பளமும் கொடுத்து, என் வீட்டில் வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் நீதான் பொறுப்பு என்று சொல்லி சுந்தரத்தை பாராட்டினார். சுந்தரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை . . . என்ன ஐயா . . என்ன சொல்றீங்க. ஆமாப்பா, உன் உண்மையான வேலைக்கு கிடைத்த பரிசுதான். வா வீட்டுக்கு போகலாம் என்று சொன்ன பண்ணையாரை பார்த்து ஆச்சரியப்பட்டார் சுந்தரம். தான் பட்ட கஷ்டத்துக்கு நல்ல வழியை ஆண்டவர் காட்டினார் என்று சொல்லி ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே பண்ணையார் வீட்டை நோக்கி சென்றார்.

 

கதையை கேட்டீங்களா, குட்டி செல்லங்களே! நீங்க செய்கின்ற வேலையை ஆண்டவர் கவனித்து கொண்டே இருக்கிறார். உங்க உண்மைக்கு தக்க பரிசை ஆண்டவர் நிச்சயம் தருவார். எந்த காரியத்திலும் உண்மையா இருப்பீங்களா? Ok Bye!

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet