By Village Missionary Movement
Wednesday, 27-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 27.09.2023
யார் எழுப்புதலின் வீரன்?
"அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்" - பிலி. 3:11
இந்திய தேசத்தின் எழுப்புதலுக்காக எப்படிப்பட்டவர்களை தேவன் தேடிக்கொண்டிருக்கிறார் என்று காண்போமா?
ஜெபமே அவர்களது முக்கிய அலுவலாக இருக்கவேண்டும்.
ஆத்தும அறுவடையே அவர்களது குறிக்கோளாக இருக்கவேண்டும்.
தேவ சமூகமே அவர்களது இன்பமாக இருக்கவேண்டும்.
தேவ ஊழியமே அவர்களது பாரமாக இருக்கவேண்டும்.
கடின உழைப்பே அவர்களது பிரியமாக இருக்கவேண்டும்.
கர்த்தருக்காகப் படும் பாடுகள் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கவேண்டும்.
உலகம் அவர்களுக்கு வனாந்தரமாக இருக்கவேண்டும்.
சுகபோகம் அவர்களுக்கு குப்பையாக இருக்கவேண்டும்.
நேர்மை அவர்களுடன் பிறந்ததாக இருக்கவேண்டும்.
மாய்மாலம் அவர்களுக்கு அருவருப்பாக இருக்கவேண்டும்.
பாவம் அவர்களுக்கு கசப்பாக இருக்கவேண்டும்.
மன்னிக்கும் சுபாவம் அவர்களது நண்பனாக இருக்கவேண்டும்.
வேதவசனம் அவர்களது ஆகாரமாக இருக்கவேண்டும்.
பணஆசை அவர்களுக்கு எதிரியாக இருக்கவேண்டும்.
ஜாதி வேற்றுமை அவர்களுக்கு வாந்தியாக இருக்கவேண்டும்.
அன்பு அவர்கள் வாழ்வில் ஜீவ ஊற்றாக இருக்கவேண்டும்.
ஆவியின் அபிஷேகம் அவர்களது ஆசையாக இருக்கவேண்டும்.
பிரசங்கிப்பதில் அவர்கள் நயவசனிப்பில்லாத பவுலாக இருக்கவேண்டும்.
உபவாசம் அவர்களது உயிர்த்தோழனாய் இருக்கவேண்டும்.
தேவசித்தம் செய்தல் அவர்களது விருந்தாக இருக்கவேண்டும்.
பரிசுத்தமே அவர்களது அலங்காரமாக இருக்கவேண்டும்.
பரலோகமே அவர்களது ஆஸ்தியாக இருக்கவேண்டும்.
இறுதியாக, நரகத்தை நடுங்கவைத்து, பாதாளத்தை பதறவைத்து, பரலோகத்தை பரவசப்படுத்தி, பரமனையே பாராட்டவைத்து, தேசத்தையே தேவனை நோக்கித் திருப்புகிறவனே எழுப்புதல் வீரன்! எழுப்புதல் வீரனிடம் பேச்சைவிட ஜெபம் அதிகமாயிருக்கும். தர்க்கங்களைவிட தாக்கம் அதிகமாயிருக்கும். திட்டங்களைவிட செயல்பாடு அதிகமாயிருக்கும். எழுப்புதல் வீரன் தீக்குச்சிதான் . . . ஆனால் அவன் பற்ற வைப்பது அடுப்பை அல்ல. . . வெடிகுண்டை!
- தெரிந்தெடுக்கப்பட்டது
ஜெபக்குறிப்பு:
நம்முடைய பத்திரிக்கை ஊழியம் ஒவ்வொன்றிலும் தேவ வழிநடத்துதல் காணப்பட ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864