By Village Missionary Movement
Sunday, 08-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 08.10.2023 (Kids Special)
எல்லாம் நன்மைக்கே
"…தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” - ரோமர் 8:28
அது ஒரு அழகான பட்டணம். அந்த பட்டணத்திற்கு அருகாமையில் நிறைய படிகளுடன் கூடிய ஒரு குளம் இருந்தது. அங்கு எல்லோராலும் அற்பமாய் எண்ணப்பட்ட ஒரு பரம ஏழையும் வசித்து வந்தான். அவனுடைய குடியிருப்பே அந்த குளத்துக் கரையாக இருந்தது.
ஒருநாள் அந்த பட்டணத்து ராஜாவின் ஒரே மகளுக்கு பிறந்தநாள் வந்தது. அந்த நாளன்று ராஜா அந்த ஊர் மக்களுக்கு விருந்து வைத்தான். ராஜா வீட்டு சாப்பாடு என்றால் சொல்லவா வேணும். மட்டன் பிரியாணி, சிக்கன், பாயாசம் இப்படி தடபுடலாய் நடந்தது. எல்லோரும் வரிசையில் நின்று வாங்கினார்கள். இந்த ஏழை மனிதனும் போய் நின்றான். ஆனால் எல்லோரும் இவனை ஏளனமாய் பார்த்து ஓரமாய் ஒதுக்கினார்கள். சாயங்காலம் வரைக்கும் காத்திருந்த அவனுக்கு பெரிய ஏமாற்றம். சாப்பாடு கிடைக்கவில்லை. சோர்வோடு அந்த குளத்துக்கரையில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்து, "கடவுளே நான் பரம ஏழையாய் பிறந்தது நான் செய்த பாவமா? ஏன் என்னை இவ்வளவு சோதிக்கிறீர். எல்லோரும் இராஜா வீட்டு சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் இப்படி" . . . என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் இராஜா விருந்தை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது குளத்துக்கரையில் மெலிந்த உடலுடன் உட்கார்ந்திருந்த அந்த மனிதனை பார்த்தார். உடனே இரதத்திலிருந்து இறங்கி அந்த மனிதனின் தோள்மேல் கை வைத்து, "சாப்பிட்டாயா?" என்று கேட்டார். உடனே அவன் இராஜா என்று தெரியாமல் எல்லோரும் இராஜா வைத்த விருந்தில் சாப்பிட்டார்கள். ஆனால் எனக்கு அதற்கு கூட கொடுத்து வைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே தண்ணீரைப் பார்த்தான். தண்ணீருக்குள் இராஜாவின் முகம் தெரியவே திரும்பி பார்த்து, "ராஜா மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையே கொடுக்கவில்லை" என்றான். உடனே இராஜா, "பரவாயில்லை என் மகளின் பிறந்தநாளன்று யாரும் பட்டினியோடு இருக்கக்கூடாது" என்று சொல்லி அவனை தனது இரதத்தில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு போய் குளிக்க வைத்து, புது டிரஸ் கொடுத்து அவரோடு சாப்பிட வைத்து சில பொற்காசுகளை கொடுத்து இதை வைத்து உன் பிழைப்பை நடத்திக் கொள் என்று சொல்லி அவனை அனுப்பினான். அவனும் கண்ணீர் மல்க நன்றி சொல்லி விட்டு கிளம்பினான்.
தம்பி, தங்கச்சி உன்னையும் உன் குடும்பத்தையும் கூட யாராவது அற்பமாய் ஏளனமாய் பார்க்கிறார்களா? கவலைப்படாதே இந்த ஏழை மனிதனை உயர்த்தின இயேசப்பா உன்னையும் அவர்கள் கண்களுக்கு முன்பாக உயர்த்துவார். இயேசப்பா நம் வாழ்வில் எதை செய்தாலும் அதை நன்மைக்காகவே செய்வார் என்பதை மறந்துபோகாதே. ஓகே வா செல்லங்களா!
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864