By Village Missionary Movement
Monday, 09-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 10.10.2023
வனாந்திரம்
"…அதின் வனாந்தரத்தை ஏதேனைப் போலவும், அதின் அவாந்தரவெளியைக் காத்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்;…" - ஏசாயா 51:3
வாழ்க்கையில் பாலைவனம் என்பது யாரும் இல்லாத, தனிமையான, கடுமையான சூழ்நிலை ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலை எல்லோருடைய வாழ்விலும் வரும். இதை ஒருவராலும் avoid பண்ண முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படி கடக்கிறோமோ அதை பொறுத்து நமது வாழ்வு தொடரும். இதில் முறுமுறுத்து, ஏதாவது சுய முயற்சி செய்து கடக்க முயன்றால் சோர்ந்து விடுவர். பலர் இச்சூழலில் கடக்க முடியாமல் வாழ்வை முடித்து நரகம் செல்கின்றனர். ஒன்று மட்டும் மனதில் கொள்ளுங்கள், உயர்விற்கு பயிற்றுவிக்க, உயர்த்தவே பாலைவனம் வருகிறது.
தாவீது ராஜாவாக உயர, பாலைவனத்தில் அவர் பெற்ற அனுபவமே உதவியது. இராணுவத்திற்காய் சிறப்பான கல்விக் கூடங்களில் கடினமாய் அவன் சகோதரர்கள் பெற்ற பயிற்சிகள் உதவவில்லை. ஏனெனில் மனித உதவியில்லா பாலைவனத்தில் கர்த்தரைப் பாடி, கடின சூழ்நிலைகளை மேற்கொண்டு வாழ பயிற்றுவிக்கப்பட்டார். ஆகார், வனாந்திரத்தில் நீர் என்னைக் காண்கிற தேவன் என்றாள். ஆபிரகாம், யேகோவாயீரே என்றான். அதுபோல நீங்களும் தேவனை ருசிக்க முடியும். இச்சூழலில் அவரை நோக்கி பார்த்தால் நம் சூழலுக்கு ஏற்ப தன்னை விளங்கச் செய்வார். நாம் அப்படியே அவரை பற்றிக் கொள்ளும் போது வனாந்திரமும் கர்த்தரின் தோட்டம் போல் இருக்கும். கர்த்தரின் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் கர்த்தருடன் உலாவியது போல நீங்களும் உலாவலாம். சீக்கிரமாய் பாலைவனம் கடந்துவிடும். கானான் வந்து விடும்.
பாலைவனம் உயர்வின் பிறப்பிடம் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் இது போன்ற அனுபவத்தில் இருந்தால் உங்களைப் பார்த்து நீங்கள் சொல்ல வேண்டியது, "உயர்வுக்கு பயிற்சி கர்த்தரைப்பார் சுற்றிப்பாராதே அவரே உருவாக்குவார்" என்று! மோசே பெரிய தலைவனாக உருவாக்கப்பட்டதும் பாலைவனத்தில்தான். ஏன் கிறிஸ்துவே ஊழியத்தில் பயன்படுத்தப்படுவதற்கு முன் ஆவியானவரால் வனாந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். உயர்வை விரும்பவில்லை என்றால் பொறுமையை தூக்கியெறியுங்கள். மாறாக முறுமுறுப்பை தூக்கியெறிந்து பொறுமையை கையாண்டு நீடிய பொறுமையுடையவரை நோக்கி பார்த்தால் பாலைவனத்தின் நாட்கள் குறைக்கப்படும். உயர்வு மிக மிக நிச்சயம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு உதவி செய்யும் அநேக குடும்பத்தினரை தேவன் எழுப்பித்தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864