Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.10.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 11-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 11.10.2023

 

கூஷி- ன் குணாதிசயம்

 

"கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே,நற்செய்தி, இன்று…" - 2 சாமுவேல் 18:31

 

பரிசுத்த வேதாகமத்தில் அநேக பரிசுத்தவான்களின் வாழ்க்கை எழுதப்பட்டுள்ளது. சில கதாபாத்திரங்களின் வாழ்க்கை நமக்கு முன் உதாரணமாகவும், சிலரின் வாழ்க்கை நமக்கு எச்சரிப்பாகவும் எழுதப்பட்டுள்ளது. இன்று நாம் கூஷ் என்பவரின் குணாதிசயத்தை நம்முடன் ஒப்பிட்டு நம்மை சரிசெய்து கொள்வோம்.

 

கூஷ் கட்டளையிட்ட பணியை செய்பவர் : 

எப்படியென்றால் யோவாபினால் நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்ற கட்டளை வந்தவுடன் மிகவும் துரிதமாய் செயல்படுவதை நாம் வாசிக்கின்றோம். எனக்கு ஊழியம் செய்ய வாஞ்சை. ஆனால் வேலையை விட முடியாது. பகுதி நேரமாக ஊழியம் செய்து ஆண்டவரின் கட்டளையில் என் பங்கை நிறைவேற்ற விரும்புகிறேன் என எண்ணலாம். நீங்கள் கூஷ் ஐ போல ஓடி ராஜா ஸ்தானத்தில் இருக்கிறவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கமுடியும். இயேசுவின் கட்டளைகளை செவ்வையாய் செய்து, வேலை ஸ்தலத்தில் சாட்சியாய் இருந்து, ஆத்தும ஆதாய பணி செய்திட தேவன் கிருபை செய்வாராக.

 

கூஷ் நிதானமாய் ஓடினார் :  

நாம் செய்கிற வேலை ஸ்தலமாக இருக்கலாம், ஊழிய பாதையாக இருக்கலாம், எதுவானாலும் உங்களுக்கு வர வேண்டிய சில உயர்வுகள் தாமதிக்கலாம். அதற்காக அவசரப்பட்டு நிதானமின்றி செயல்பட்டு மற்றவர்களோடு ஒப்பிட்டு நம்முடைய சமாதானத்தை இழந்து போகாமல், கவனமாய் இருப்பதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.  

 

கூஷ் முறையாக அறிவிக்கிறவர்:  

யுத்தகளத்தில் நடந்த சம்பவத்தை முறையாக மற்றும் தெளிவாக எடுத்து கூறுகிறார். நாமும் தேவசமூகத்தில் காத்திருந்து தெளிவான வார்த்தைகளை மக்களுக்கு எளிதாக புரியும்படி அறிவிக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

நான்காவதாக கூஷ் செய்த இந்த செயல் ராஜாவையே கலங்கப் பண்ணியது. ஆம், தேவன் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறவர்களையும் சீர்படுத்தி தேவனின் அன்பை உணர வைக்க முடியும்.  

 

பிரியமானவர்களே! மேலே சொல்லப்பட்ட கூஷின் நான்கு குணாதிசயமும் நம்மிடையே காணப்படுகிறதா? இல்லையா? இன்றே நாம் நம்மை நிதானித்து அறிவோம். நம்மை பயன்படுத்துவதற்கு அவர் ஆயத்தமாயிருக்கிறார். நானும், நீங்களும் ஆயத்தமா?

- Mrs. தவமணி வைரவேல்

 

ஜெபக்குறிப்பு: 

நம் வளாகத்தில் செயல்படும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நபர்கள் இயேசுவின் அன்பை அறிய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom