By Village Missionary Movement
Thursday, 12-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 12.10.2023
இரத்த சாட்சி பிலிப்பு
"…ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” – எபிரெயர் 12:24
ஆபேல் முதல் சகரியா வரை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் கொல்லப்பட்டனர். ஆபேலின் இரத்தம் இன்றும் பேசுகிறது. இரத்த சாட்சிகளின் இரத்தம் பேசும்! அவர்களின் இரத்தத் துளிகளால்தான் சபைகளும், கிறிஸ்தவமும் வளருகிறது. புதிய ஏற்பாட்டில் முதல் சீஷன் யாக்கோபு, முதல் இரத்த சாட்சியாக மரித்தார். இந்த வரிசையில் 12 சீஷர்களில் ஒருவர் தான் பிலிப்பு. அவரை பற்றி காண்போம்.
அப்போஸ்தலனாகிய பிலிப்பு பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவர். பிலிப்பு என்ற கிரேக்க சொல்லுக்கு குதிரை என்று பொருள். அவராக கிறிஸ்துவை தேடி போகவில்லை, கிறிஸ்துவே அவரை அழைத்தார். பிலிப்புவைக் கண்டு அவரை எனக்குப் பின் சென்று வா என அழைத்தார்.(யோவான் 1:43) பிலிப்பு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து அறிகிறவராக காணப்பட்டார். இவர் தனது நண்பனாகிய நாத்தான் வேலை கிறிஸ்துவண்டை அழைத்து வரக்கூடிய கருவியாக காணப்பட்டார்.(யோவான் 1:45) பிலிப்பு கடைசி நாட்களில் கொடியவர்களின் கையில் அகப்பட்டபோது சிலுவையில் கட்டி உதைத்து கல்லால் அடித்துக் கொன்றார்கள். இயேசுகிறிஸ்துவோடு இருந்து அவரது தியாக அன்பை கண்ட பிலிப்பு தன்னையும் இரத்த சாட்சியாக மரிக்க ஒப்புக் கொடுத்தார்.
நாமும் நம்மைச்சுற்றி வாழுகின்றவர்களுக்கு சாட்சியாக இருக்கிறோமா? இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லுகிறோமா? நமது சொல், செயல் எப்படிப்பட்டதாகக் காணப்படுகிறது. சிந்தித்துப் பார்ப்போம். ஆண்டவரின் அன்பை அறிந்த நாம் சும்மா இருக்கலாமோ? நம்மால் இயன்றதை கிறிஸ்துவுக்காக செய்ய முன் வருவோம். அநேக இரத்த சாட்சிகளின் இரத்தத்தின் மேலேதான் நம் சபைகள் கட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து தியாகமான வாழ்விற்கு நம்மை ஒப்புக் கொடுப்போம்.
- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது பத்திரிக்கை ஊழியங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864