Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.10.2023
Share:

By Village Missionary Movement

Friday, 13-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 13.10.2023

 

ஒப்புரவாகுங்கள்

 

"ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்;" - ரோமர் 12:16

 

ஒருமுறை ஒரு பெண் தன் வயதான, சுகவீனமான தாயிடம் தனது கசப்புணர்ச்சியை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தாள். "போதும் போதும் இவ்வளவு சாப்பிட்டால் போதாதா? சாகப்போகிற பாட்டிக்கு தினமும் குளித்து, டிரஸ் மாற்ற வேண்டுமா?" என்று சொல்லும் போதெல்லாம் வயதான தாயார் தாங்கொண்ணா வேதனையடைந்தார்கள். ஒருநாள் அந்த மகள் ஆவியானவரால் உணர்த்தப்பட்டாள். தனது தாயின் மீது காட்டும் கசப்புணர்வு எப்படி மீண்டும் தனக்கு பிரதிபலிக்கும் என்பதை பரிசுத்த ஆவியானவர் உணர்த்தியதால், கண்களில் நீர் பிரவாகிக்க தன் தாயிடம் மன்னிப்பு பெற்று ஒப்புரவாக விரும்பினாள். அன்றைக்கு வீடு திரும்பும் போது ஒரு மலர்க்கொத்து வாங்கி தன் அம்மாவிடம் கொடுத்து அம்மா என்னை மன்னித்து விடுங்கள், அநேக நேரம் உங்கள் மனதை புண்ணாக்கியிருக்கிறேன் என்று அழுதாள். தாயும், மகளும் ஒப்புரவானார்கள். அந்த ஒப்புரவாகுதலின் அலை, அவர்களது பக்கத்து வீட்டு நபர்களோடு கொண்டிருந்த பகையை அந்த தாயாருக்கு உணர்த்தியது. தன்னை மன்னிக்குமாறு லெட்டர் எழுதி தன் மகளிடம் கொடுத்து அனுப்பினாள். கற்பனை செய்ய முடியாத அளவு அனைவரும் வந்து அந்த தாயோடு ஒப்புரவாகி மகிழந்தனர். கிறிஸ்துவின் அன்பு அந்தத் தெரு முழுவதும் பிரவாகித்தது. அதன்மூலம் கர்த்தரின் அன்பை அனைவரும் உணர்ந்தனர். மனதில் ஏற்பட்ட மாறுதலால் சரீர பெலவீனம் நீங்கி சுகமானார்கள். ஒப்புரவாகுதல் எவ்வளவு மேன்மையானது பாருங்கள்.

 

வேதத்தில் பழைய ஏற்பாட்டு யோசேப்பை குறித்து நாம் அறிவோம். யோசேப்பிற்கு விரோதமாக அவரது சகோதரர்கள் பல தீங்கான காரியத்தை செய்தார்கள். ஆனால் யோசேப்பு தேசத்துக்கு அதிபதியாக மாறிய போதிலும் தன்னுடைய சகோதரர்களை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணமோ, கசப்போ, எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாதவராகவே காணப்பட்டார். யோசேப்பிற்குள் நல்ல ஒப்புரவாகுதலும், மன்னிக்கிற சுபாவமுமே இருந்தது.

 

பிரியமானவர்களே! பெசிலியா என்ற பரிசுத்தவாட்டி சொல்கிறார், "ஒப்புரவாகுதல் என்பது பரலோகத்தின் பெரு மகிழ்ச்சியை ருசிப்பதற்கு சமம்" என்று! பிறரை மன்னித்தால் இந்த உலகத்திலேயே நாம் அதை ருசிக்கலாம். ஆகவே நாம் எல்லோரிடமும் ஒப்புரவாகி கிறிஸ்துவின் சிந்தையோடு அன்பை வெளிப்படுத்தி தெய்வீக சமாதானம் பெறுவோம். இயேசுவானவர் மரணபரியந்தம் தம்மை தாழ்த்தினது போல (பிலிப்பியர் 2:8) நாமும் நம்மை தாழ்த்தி, மற்றவர்களை மன்னித்து ஒப்புரவாகுதலின் நன்மையை பெற்றுக்கொள்வோம்.

- Mrs. ஜாஸ்மின் பால்

 

ஜெபக்குறிப்பு:

நமது பத்திரிக்கை ஊழியங்களில் எழுதும் நபர்கள் தேவ ஆவியினால் செயல்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking casibom giriş perabet padişahbet padişahbet giriş holiganbet matbet perabet perabet giriş instagram ban service pashagaming pashagaming giris gorabet gorabet giris grandpashabet çarkbet çarkbet giriş deneme bonusu casibom giriş casibom vaycasino vaycasino giriş casibom meritking casibom casibom giriş meritking meritking giriş holiganbet jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet grandpashabet grandpashabet grandpashabet cratosroyalbet