By Village Missionary Movement
Monday, 16-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 16.10.2023
தேடி வருகிறவர்
"…நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்…” - யோவான் 11:40
அமெரிக்க தேசத்திலே ஒரு மருத்துவர் கேன்சருக்கான மருந்து கண்டுபிடித்தார். அவருக்கு அரசாங்க விருது வழங்க அழைப்பு கொடுத்து விழா ஏற்பாடு செய்தனர். மழை, புயல் காரணமாக விழாவிற்கு விமானத்தில் செல்ல முடியாமல் காரில் சென்றார். குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் செல்ல முடியாமல் கார் ஒரு வீட்டிற்கு முன் வந்து நின்றது. இவர் அந்த வீட்டின் கதவை தட்டி தண்ணீர் கேட்டார். உடனே அந்த அம்மா அவர்களை உள்ளே அழைத்து குடிக்க தண்ணீர் கொடுத்து அமர வைத்து விட்டு வியாதிப்பட்ட தன் மகனின் சுகத்திற்காக உள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டி அழுது ஜெபித்தாள். அந்த அம்மா வெளியே வந்ததும் என் மகனின் வியாதிக்கான மருந்தை ஒருவர் வேறு நாட்டிலுள்ள டாக்டர் கண்டுபிடித்துள்ளார். அவரை பார்க்கும்படி எங்கள் மருத்துவர் கூறிவிட்டார். என்னால் அங்கு செல்ல வசதியில்லை அதினால் என் பரமதகப்பனிடம் அழுது ஜெபித்தேன் என்று சொன்னார்கள். அவர் ரிப்போர்ட்டை வாங்கி பார்த்துவிட்டு அந்த டாக்டர் நான்தான். நான் உங்கள் மகனை அழைத்து சென்று மருத்துவம் செய்கிறேன் என்றார். தேவன் அந்த தாயின் ஜெபத்தைக் கேட்டு, மருத்துவரே தேடிவரும்படி செய்தார்.
வேதத்திலும் இயேசு கிறிஸ்து பூமியில் உலாவிய நாட்களில் விசுவாசத்தோடு அவரிடத்தில் வந்து வேண்டின யாவருக்கும் சுகத்தை, பெலனை கொடுத்து மகிழ்ச்சியோடு அனுப்பினார். அவரை அழைத்தவர்கள் வீட்டிற்கு சென்று அற்புதம் செய்தார். பேதுருவின் வீட்டிற்கு சென்று மரித்த மகளை உயிரோடு எழுப்பினார். சகேயுவின் வீட்டிற்கு சென்று இரட்சிப்பின் சந்தோஷத்தைக் கொடுத்தார். அதேபோல் விசுவாசத்தோடு காத்திருந்தவர்களுக்கு தேடிச் சென்று சுகம் தருகிறார். 38 வருடமாய் வியாதியாயிருந்த மனிதனை தேடிச் சென்று சுகம் கொடுத்தார். கூனியாய் இருந்த ஸ்திரீ, சூம்பின கையை உடைய மனுஷனுக்கு ஆலயத்தில் வைத்து சுகம் கொடுக்கிறார். விசுவாசத்தோடு கேட்ட நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனுக்கு சுகம் கொடுத்தார். ஏன் மரித்து நான்கு நாட்கள் ஆன லாசருவைக் கூட எழுப்ப கல்லறைக்குத் தேடிச் செல்கிறார்.
பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் எந்த பெலவீனம், சுகவீனம், எப்படிப்பட்ட குறைவுகள், முடிந்தது போன்ற சூழ்நிலைகள் இருந்தாலும் அதிலிருந்து ஒரு விடுதலையைத் தர தேவனால் முடியும். நம் கர்த்தர் "சமுத்திரத்திலே வழியையும், வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி" என்று ஏசாயா 43:16 ல் உள்ளது. ஆதலால் உங்கள் விசுவாசம் இல்லாமல் புதைக்கப்பட்டதாய் இருந்தால் அதை எடுங்கள். விசுவாசத்தோடு அவரிடம் ஜெபியுங்கள் அவர் தேடி வந்து அற்புதம் செய்வார். அல்லேலூயா.
- Sis. பியூலா
ஜெபக்குறிப்பு:
நம் பணித்தளங்களில் முப்பது நாட்களும் 30 வீடுகளில் ஜெபக்கூட்டங்கள் நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864