By Village Missionary Movement
Thursday, 19-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 19.10.2023
எத்தனை காலம் காத்திருப்பாய் ?
"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்" - நீதிமொழிகள் 13:12
பச்சைப்பசேலென்று பளிச்சிடும் நிறத்தில் கோவைப்பழ நிற அலகுடைய அழகான கிளி ஒன்று காட்டில் உள்ள மரங்களை சுற்றி வந்தது. ஓங்கி வளர்ந்த கிளைகளுடனும் பெரிய இலைகளையும் நீண்ட காய்களை கொண்ட இலவ மரம் கிளியின் கண்ணில் பட்டது. எப்படியாவது இம்மரத்தின் கனியை தின்று விட வேண்டும் என்ற ஆசையில் பழம் பழுக்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. அந்தோ பரிதாபம் காய்கள் பழுக்காமல் காய்ந்து வெடித்து பஞ்சுகள் பறந்தன. காத்திருந்த கிளிக்கோ ஏமாற்றமே மிஞ்சியது.
வேதத்தில் யோவான் 5.5 ல் முப்பத்தெட்டு வருஷமாய் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷனை வாசிக்கிறோம். நாம் யோசித்து பார்ப்போம் 38 வருடம் வியாதியாய் இருந்தவன் தண்ணீர் எப்பொழுது கலக்கப்படும் என்றுதான் பார்த்தான். ஆனால் நடந்தது என்ன? வேறொருவர் போய் சுகம் கொடுக்கிறார். இவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை. எனவே 38 வருடம் காத்திருந்தார். நல்லவேளை இயேசுவே தேடிச்சென்று அந்த மனிதருக்கு சுகத்தை கொடுத்தார். இல்லை எனில் அவனுடைய 38 வருட காத்திருப்பும் வீணாக போயிருக்கும். இதை போன்றுதான் நம்முடைய வாழ்விலும் திருமணத்திற்காக, குழந்தைக்காக, வீடு கட்டுவதற்காக மற்றும் வேலைக்காக காத்து கொண்டே இருக்கிறோம். ஆனால் பல நேரங்களில் தோல்வியைத்தான் நாம் சந்திக்கின்றோம்.
இதனை வாசித்துக் கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே! நம்முடைய காத்திருப்பு எப்படிப்பட்டது? இலவமரத்தின் உண்மை நிலையை அறியாமல் பழத்திற்காக காத்திருந்த கிளியைபோல இருக்கிறதா? அல்லது வியாதியிலிருந்து, பிரச்சனையிலிருந்து, சமாதான குறைச்சலில் இருந்து உண்மையாக விடுவிக்கும் ஆண்டவரை நோக்கி இருக்கிறதா? உங்களுடைய காத்திருப்பு யாரை நோக்கி எதை நோக்கி இருக்கிறது? சிந்தியுங்கள். கர்த்தருக்கு காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. (சங்கீதம் 27:14)
- Mrs. பூவிதா எபினேசர்
ஜெபக்குறிப்பு
ஏழாயிரம் மிஷனெரிகள் ஒரு லட்சம் கிராமங்கள் என்ற இலக்கினை அடைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864