Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.10.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 19-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 20.10.2023

 

நாவும் - பொல்லாப்பும்

 

"அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்" - சங்கீதம் 64:8

 

விஜயபுரி என்ற நாட்டை விஜயவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவருடைய அரசவையில் மகிபாலன் என்ற குள்ளமான அமைச்சர் ஒருவர் இருந்தார். ஒருசமயம் மன்னன் அவரை பக்கத்து நாட்டிற்கு தூதராக அனுப்பினார். அந்த நாட்டு அரசன் தூதுவராக வந்த அமைச்சர் மகிபாலன் குள்ளனாக இருந்ததால் அவரை ஏளனமாகப் பார்த்து, கிண்டல் செய்து பேசினார்.  

 

"உன்னை விட சிறந்த ஒருவன் உங்கள் நாட்டில் இல்லையா? என்று கேட்டான். இதனால் அமைச்சர் பெரிதும் மனவேதனை அடைந்தார். உடனே அவர், "அரசரே எங்கள் நாட்டிற்கு ஒரு வழக்கம் உண்டு. அந்த வழக்கத்திற்கு ஏற்ப என்னை இங்கே தூதுவனாக அனுப்பி உள்ளார் மன்னன். என்றார். "உங்கள் நாட்டு வழக்கம்தான் என்ன?" என்று கேட்டார். அதற்கு அமைச்சர், "அரசரே ஒவ்வொரு நாட்டின் இயல்புகளுக்கு ஏற்றபடியே தூதர்களை அனுப்புவது எங்கள் மன்னரின் வழக்கம். அறிவு உள்ள அரசர் ஆளும் நாட்டிற்கு அறிவுள்ள தூதர்களை அனுப்புவது, முட்டாள்களான அரசர் ஆளும் நாட்டிற்கு முட்டாளை அனுப்புவார். எங்கள் நாட்டிலேயே வடிகட்டிய பெரிய முட்டாள் நான்தான். அதனால்தான் என்னை இங்கு அனுப்பினார்" என்றார். இதைக் கேட்டதும் அந்த அரசர் அவமானத்தால் தலைகுனிந்தார்.

 

ஆம், கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்றைக்கும் நாம் நம்முடைய பேச்சில் கவனமாக இருக்கின்றோமா? பிறரை குற்றப்படுத்துவதற்கும், காயப்படுத்துவதற்கும் நம்முடைய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றனவா? சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.

 

"பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும் என்று சங்கீதம் 140:11ல் சொல்லப்பட்டுள்ளது.  

 

வேதத்தில் கூட தன்னுடைய நாவால் பிறரை வேதனைப்படுத்திய ஒரு மனுஷன் இருந்தான். அவன் பெயர் நாபால். தாவீது 10 இளைஞர்களை நாபாலிடம் அனுப்புகிறார். ஒருகாலத்தில் நாபாலுக்கு தாவீது உதவியாக இருந்தவர்.  

 

ஆனால் நாபாலோ, "தாவீது யார்? எஜமானை விட்டு ஓடிப்போனவர்கள் இங்கு ஏராளம் உண்டு. நான் அவனுக்கு உதவ மாட்டேன்" என்று அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறான். இதனால் தாவீது நாபாலுக்கு விரோதமாக வருகிறார். தன்னுடைய கனிவில்லாத பேச்சால் தனக்கு ஆபத்தை வருவித்துக் கொண்டதை இன்றைய வேதபகுதியில் வாசித்தோம். நாமும் கூட பிறரிடம் பேசும் போது கனிவான வார்த்தைகளை பேசுவோம். பிறர் மனம் புண்படும்படி பேசாதிருப்போம். ஆமென்!

- Mrs. திவ்யா அலெக்ஸ்

 

ஜெபக்குறிப்பு 

ஒவ்வொரு மாநிலங்களிலும் 500 தோழமை ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள் .

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet