Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.10.2023
Share:

By Village Missionary Movement

Friday, 20-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 21.10.2023

 

பெரிய மீன்

 

"…உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்” - எபிரெயர் 13:5

 

ஒரு மனிதன் தன்னுடைய சிறிய படகை கொண்டு எளிய முறையில் மீன் பிடிக்கச் சென்றான். அன்று அவனுடைய வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கிக் கொண்டது. ஆனால் அந்த சிறிய படகின் மூலம் அந்த பெரிய மீனைக் கரைக்கு கொண்டு வருவது கடினம். ஆயினும் பேராசையின் விளைவாக அந்த பெரிய மீனை அவன் கரைக்கு கொண்டு வர முயற்சித்தான். அது மிகவும் கடினமாயிருந்தபடியால் நீண்ட நேரம் முயற்சித்து களைத்துப் போனான். இறுதியில் வேறு வழியின்றி அதனை வலையுடன் கடலில் விட்டுவிட்டு உயிர் பிழைக்க கரைவந்து சேர்ந்தான். வழக்கமாகப் பிடிக்கும் கொஞ்ச மீன்களும் அன்று அவனுக்கு நஷ்டமாயின.

 

சில நேரங்களில் வாழ்க்கையில் பெரியபெரிய ஆசைகளும் பெரியபெரிய கனவுகளும் நம்முடைய இருதயத்தில் புகுந்து நம்மை பாரமாக்கி விடுகிறது. பெரிய அளவில் ஆசைப்படத் துவங்கியதால் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்றும் வழியும் தடைபட்டுப் போகிறது.

 

ஏவாளின் இருதயத்தில் பிசாசானவன் மிகப்பெரிய ஆசையை நுழைய விட்டான். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். தேவனைப் போல மாறினால் என்ன என்ற அவளுடைய ஆசை, தேவன் அவர்களுக்காக வைத்திருந்த உயர்ந்த ஆசீர்வாதங்களை இழக்கச் செய்தது.

 

நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் சிலரின் உள்ளங்களில் பண ஆசை, பொருளாசை, புகழாசை, ஆடம்பர ஆசை ஆகியவைகள் புகுந்து விடுகின்றன. அவைகள் சுமைகளாக மாறி வழக்கமாக அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த நல்ல ஆசீர்வாதங்களையும் இழக்கச் செய்து விடுகின்றன.

 

வேதாகமத்தில் நாம் வாசிக்கின்றோம் கேயாசியின் உள்ளத்தில் புகுந்துவிட்ட பொருளாசை அவனுடைய நல்ல நிலைமையை இழக்கச் செய்தது. இழக்கச் செய்ததோடு குஷ்டரோகியாகவும் மாறினான். உயர்வுகளைக் குறித்த ஆசைகள் தவறல்ல. ஆனால் அவைகள் பேராசைகளின் முகமூடிகளாக மாறிவிடாதபடி கவனமாயிருப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!

- Bro. பால் ஜெபஸ்டின்ராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

அலுவலகப் பணிக்கென்று அவசரத் தேவையான பிரிண்டர் வாங்க, வாங்கித் தரும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet