By Village Missionary Movement
Saturday, 21-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 22.10.2023
சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்
"…நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” - மாற்கு 16:15
இராபர்ட் Uncle மிகப்பெரிய தொழிலதிபர். ஏழைகளுக்கு உதவும் உள்ளம் கொண்டவர். அவருடைய கம்பெனியில் வேலைபார்க்கும் நபர்களுக்கோ அவர்கள் குடும்பத்திற்கோ ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் ஓடி வந்து உதவ கூடியவர்.
ஒருநாள் தூங்கிக் கொண்டிருந்த ராபர்ட் Uncle கனவில் பரலோகம் மற்றும் நரகம் பற்றி ஒரு Picture வந்தது. அதில் பூமியிலிருந்து மனிதர்கள் ஏறுகிறவர்களாயிருந்தார்கள் மற்றும் ஒரு கூட்ட ஜனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு தூதன் பெரிய புஸ்தகத்தை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த புஸ்தகத்தில் பேர் இல்லாதவர்களை இடதுபுறமாகவும் பேர் இருந்தவர்களை வலதுபுறமாகவும் அனுப்பி கொண்டிருந்தான். இடதுபுறத்தில் எரிகிற அக்கினியும், வலதுபுறத்தில் பளிங்குகற்களால் ஜொலித்து கொண்டிருந்த மாளிகையும் இருந்தது. இந்த வரிசையில் ராபர்ட்டும் அவர் கம்பெனியில் பணிபுரிந்த ராமுவும் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ராபர்ட்டை வலது புறமாகவும், ராமுவை இடதுபுறமாகவும் தூதன் அனுப்பினான். ராமு பயந்து நடுங்கி நான் அந்த எரிகிற அக்கினிக்கு போகமுடியாது. அங்கு என்னால் வேக முடியாது. அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். அங்கே நின்று கொண்டிருக்கும் எனது முதலாளி ராபர்ட்டையும் என்னுடன் அனுப்பி வையுங்கள். இவர் ஒரு கிறிஸ்தவராய் இருந்தும் எனக்கு இயேசுவை பற்றியும் சொல்லவில்லை, நரகம், பரலோகம் இருக்கிறது என்பதை பற்றியும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நான் மனந்திரும்பி இருப்பேனே என்று கதறிகதறி அழுதான். இப்படி அழுகுரல் சத்தம் கேட்டு பயந்து நடுங்கி விழித்தார் ராபர்ட். அப்பொழுதான் அவருக்கு புரிந்தது நாம் என்னதான் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களிடமிருந்து நல்லபேர் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு ஒரு முறை கூட இயேசுவைப்பற்றி சொல்லவில்லையே. நான் பெரிய தப்பு பண்ணிவிட்டேனே என்று உணர்ந்து அன்றையிலிருந்து அவர் கம்பெனியில் வேலைபார்க்கும் எல்லோருக்கும் இயேசுவைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
என்ன குட்டீஸ், நீங்க மட்டும் நல்லா இருந்து பரலோகம் போனா போதுமா? உன் கூட படிக்கிறவங்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம். ஆனால் இயேசப்பாவை பற்றி யார் சொல்லுவாங்க? உங்க ஊரில் உள்ளவங்க மற்றும் எல்லோரும் பரலோகம் போக வேண்டாமா? எனவே அந்த ராபர்ட் Uncle போல இன்றையிலிருந்து உனக்கு தெரிந்த இயேசப்பாவை மற்றவர்களுக்கும் சொல்ல மறந்திடாதே கண்ணு. ஓகே வா.
- Mrs. அனிதா அழகர்சாமி
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864