By Village Missionary Movement
Monday, 23-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 24.10.2023
வைராக்கியம்
"நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்;…” - கலாத்தியர் 4:18
தானியேல் என்றதும் தீட்டுள்ளதை சாப்பிடாமல் வைராக்கியம் பாராட்டியதுதான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். அதுமட்டுமல்லாமல் கர்த்தருடைய வல்லமையைக் குறித்தும், கர்த்தரைப் பற்றியும் வைராக்கியம் கொள்கிறார். ராஜா சொப்பனம் கண்டு மனம் கலங்குகிறார். சொப்பனத்தையும், அதின் அர்த்தத்தையும் கூறும்படி யாவரையும் அழைக்கின்றனர். இங்குதான் தானியேல் கர்த்தர் மறைபொருளை வெளிப்படுத்துகிறவர் என வைராக்கியமாய் ராஜாவிடம் போய் தவணை கேட்கிறார். பின் தானியேல் ஜெபிக்கிறார், தன் நண்பர்களையும் ஜெபிக்க சொல்கிறார். தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி தன் விசுவாசத்தை அறிக்கையிட்டு வைராக்கியமாய் ஜெபிக்கிறார். அதென்னவென்றால் ஞானமும், வல்லமையும் உமக்கு உரியது. நீரோ ஞானிகளுக்கு ஞானத்தை கொடுக்கிறவர் என்று ஜெபிக்கிறார்.
தேவனும் தானியேலின் வைராக்கியத்தைப் பார்த்து அவருக்கு சொப்பனத்தையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறார், ராஜாவிற்கு முன்சென்று கர்த்தரே வெளிப்படுத்தினார் என்றும் கூறுகிறார். ஏனெனில் "இது என்னால் முடியாதது, மறைபொருளை வெளிப்படுத்துகிறவர் தேவனே" என்ற எண்ணமே தன்னை உயர்த்தாதபடி தேவனை உயர்த்த காரணமாயிற்று. அவர் ஒவ்வொரு நாளும் தேனோடு உறவு கொண்டிருந்து தேவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். அதனால் தானியேலுக்குள் தேவனைப் பற்றிய வைராக்கியமே எரிந்து கொண்டேயிருந்தது. எவ்வளவு தடைகள் வந்தாலும் இதை விட்டுக் கொடுக்கவில்லை. வேதவாசிப்பும், ஜெபமுமே தேவனோடு நாம் கொண்டுள்ள நெருக்கத்தைக் காண்பிப்பது என அறிந்திருந்ததால் தானியேல் மூன்று வேளையும் ஜெபித்தார் என வேதத்தில் போடப்பட்டுள்ளது.
பிரியமானவர்களே! இன்று அநேக காரியங்களுக்கு வைராக்கியம் பாராட்டுகிற நாம் கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டுகிறோமா? இல்லையெனில் தேவனை நாம் அறிய வேண்டிய விதத்தில் அறியவில்லை என்றே பொருள் அவரோடுள்ள உறவு குறைவு. இன்று கடைசி காலங்களில் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களாய் எழும்ப வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கின்றார். தேவனோடுள்ள உறவை சீர்படுத்தி ராஜாக்களுக்கு முன்பாகவும், அதிகாரம் உள்ள யாவருக்கு முன்பாகவும் தேவனுக்காக வைராக்கியம் காண்பிக்கிறவர்களாக எழும்புவோம். நாமே கிறிஸ்துவின் சேனை நம் மூலமே நம் தேசத்தில் எழுப்புதல்!
- Bro. பொன்மணி சாமுவேல் ராஜா
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியத்தின் மூலம் அநேக மக்கள் தேவனின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864