Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02.11.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 01-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 02.11.2023

 

கால்களுக்குத் தீபம்

 

"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" - சங்கீதம் 119:105

 

19ம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் முழுவதையும் தன்வசப்படுத்திக் கொண்டவர், மாவீரன் நெப்போலியன் போனபார்ட். ஆனால் அவரும் கூட "வாட்டர்லூ" என்னும் இடத்தில் நடந்த போரில் தோல்வியை தழுவி "ஹெலினா" என்ற தீவில் சிறைக் கைதியாக அடைக்கப்பட்டார். ஒரு முறை அவரை சந்திக்க வந்த அவரது நண்பர் ஒருவர், அவருக்கு செஸ்போர்டு ஒன்றினை கொடுத்து சென்றார். நெப்போலியன் அதை வைத்து விளையாடி தன் வெறுமையை போக்கினார். பின்னர் நோய்வாய்ப்பட்டு மரித்துப் போனார். அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதைப் பெற்றவர் மிகுந்த ஆர்வத்துடன் முன்னும் பின்னும் பார்த்து அதில் ஒரு மூலையில் ஓர் சிறிய பட்டன் இருப்பதைக் கண்டு அதை அழுத்தியபோது அதன் உள்ளே இருந்து வெளிப்பட்ட ஒரு வரைபடத்தில், அத்தீவில் இருந்து வெளியேறி தப்பித்துக் கொள்ள வழி குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டார். நெப்போலியன் பல நாட்கள் அந்த செஸ்போர்டை பயன்படுத்தி இருந்தும் அதில் இருந்த வரைபடத்தை அவர் பார்க்கவில்லை. பார்த்து இருந்தால்...! 

 

நம்முடைய கரங்களில் கிடைக்கப்பெற்றுள்ள பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 119:105ல் இப்படியாக எழுதப்பட்டுள்ளது. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது என்று. அப்படியானால் நாம் கேட்டுக்கு தப்பி நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள தேவன் நமக்கு அவருடைய வரைபடமாகிய வேதபுத்தகத்தை நம் கரத்தில் கொடுத்துள்ளார்.

 

பிரியமானவர்களே, சாத்தானின் கண்ணிக்கு தப்பிச் செல்ல எந்த காலத்திலும் எவ்வயதினருக்கும் ஏற்ற ஒரு தலைசிறந்த வழிகாட்டி வேத புத்தகமே! ஒருவேளை நாமும் கூட பல திறமை மிக்க அனுபவங்கள் இருந்தும், வாழ்வில் பல நிலைகளில் சிறைப்பட்ட அனுபவத்தில் இருப்போமானால் வேதத்தை இன்னும் அதிகமாய் வாசிப்போம். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும், குழப்பமான நிலையிலும் முடிவெடுக்க முடியாத பல சந்தர்ப்பங்களிலும், நமக்கு நல்ல ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருப்பது இந்த வேதாகமமே. எனவே நமக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமல்ல, நேரம் எடுத்து வேதத்தை வாசிப்போம்! நேசிப்போம்! நம்முடைய வாழ்வில் அப்பியாசிப்போம்!

- Bro. பாக்கியநாதன்

 

ஜெபக்குறிப்பு:

7000 மிஷனெரிகள் ஒரு லட்சம் கிராமங்கள் என்ற இலக்கை அடைய எடுக்கும் முயற்சிகளில் தேவனுடைய கரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş