Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.11.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 09-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 09.11.2023

 

அசலா- போலியா?

 

"எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்" - 1 தெச. 5:21

 

மரத்தாலான கைவினைப் பொருட்கள் விற்பனை கடை அது. அங்கு சந்தன மரத்தாலான பொருட்களுக்கு தனி மதிப்பிருந்தது. சந்தன கட்டையினால் இரண்டு ரகங்களில் பொருட்கள் இருந்தன. ஒன்று அசல் சந்தன மரத்திலானது. அது இயற்கையான வாசனையோடும் அதிக விலை மதிப்புள்ளதாயும் இருந்தது. இரண்டாம் ரகம் சந்தன தைலத்தால் மேற்பூச்சு பூசி வைக்கப்பட்டிருந்தது. அதிக மணம் வீசுவதாகவும், விலை மலிவானதாகவும் இருந்தது. ஆனால் இதுவே பார்வையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஈர்த்தது. இரண்டாம் ரகத்திலான பொருட்களையே வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். இதனைப் பார்த்து கொண்டிருந்த சந்தன கட்டையினால் ஆன பொருள் அழுது புலம்பியது. இதனைக் கண்ட தேக்கு மர நாற்காலி "நண்பா வருந்தாதே, பொறுமையுடன் காத்திரு" என்றது. ஒரு இளைஞனும் அவரது தந்தையும் கடைக்கு வந்தனர். இளைஞன் போலி சந்தன பொருட்களை எடுத்தான். மரப்பொருட்களில் அனுபவமிக்க தந்தை முதல் தரத்தில் உள்ளதை எடுக்கச் சொன்னார். வாசனை குறைந்திருந்தாலும் அதன் உண்மையான மதிப்பை எடுத்துக் கூறி அசல் சந்தன மரத்திலான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

 

இயேசு கிறிஸ்து தெரிந்து கொண்ட பன்னிரு சீஷர்களில் ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டவனும், அவரோடு உண்ணவும், உறங்கவும் செய்த யூதாஸ் காரியோத்து மற்ற அனைவரின் பார்வையில் சீஷனாக தெரிந்தான். ஆனால் பண ஆசையினால், ஆண்டவரைக் காட்டிக் கொடுக்க சமயம் பார்த்துக் காத்திருந்த கொடிய குணம் யூதாசுக்குள் மறைந்திருந்தது. காட்டிக் கொடுக்கும் நேரம் வரும் வரையில் அதை எவரும் அறியவில்லை. பன்னிருவருடன் கடைசியாக பஸ்கா பந்தியிருக்கும் வேளையில் இயேசு, "தன்னை ஒருவன் காட்டிக் கொடுப்பான்" என்றார். ஒவ்வொருவரும் நானோ? நானோ? என கேட்கும் போது, தான் என அறிந்திருந்தும் தன் தீய எண்ணத்தை மறைத்துக் கொண்டு மற்றவர்களோடு சேர்ந்து நானோ? என அனைத்தையும் அறிந்த இயேசுவிடமே கேட்கிறான். கடைசி நிமிடம் வரை அசல் சீஷனைப் போலவே யூதாஸின் பேச்சும் இருந்தது.

 

ஆம், பிரியமானவர்களே, மனிதர்களை வெளித் தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என எண்ணி ஏமாற்றத்தில் விழுந்தவர்கள் பலருண்டு. அதனால்தான் நமதாண்டவரும் "சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவர்களாயிருங்கள்" ஆட்டுத்தோல் போர்த்துக் கொண்டு ஓநாய்களைப் போல்வரும் மனிதர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்களது கனிகளாலே அவர்களை அறிய முடியும் என கூறிய வார்த்தைகள் எத்தனை உண்மையானது! நாமும் போலியான ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து விடாதபடி கவனமாயிருப்போம்.

- Mrs. சசிகலா பரமசிவம் 

 

ஜெபக்குறிப்பு: 

ஆமென் வில்லேஜ் டிவி நிகழ்ச்சிகளை தாங்கும் பங்காளர்கள் அநேகர் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet