By Village Missionary Movement
Saturday, 11-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 11.11.2023
கர்த்தருக்குள் மகிழ்ச்சி
"...கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்" - நெகேமியா 8:10
ருமேனியா தேசத்திலே ஒரு சிறிய அறையில் ஏராளமான சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். ஒரு சுவிசேஷகரும் கிறிஸ்துவை அறிவித்ததற்காக அடைக்கப்பட்டிருந்தார். அவர் தவிர மற்ற கைதிகள் யாரும் கிறிஸ்துவை அறியாதவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். அவர்களுக்குள் எப்பொழுதும் சண்டைகளும், பிரச்சனைகளும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் சுவிசேஷகர் சிறையிலுள்ள எல்லா கஷ்டம், துன்பத்தின் மத்தியிலும் மகிழ்ச்சியாய், பொறுமையாய் கிறிஸ்துவை காண்பிக்கிறவராக வாழ்ந்து வந்தார். எல்லோருடைய கவனமும் அவர் மேல் திரும்பியது. சுவிசேஷகரிடம் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகமாகவும் இருப்பதின் இரகசியம் என்ன? என்று கேட்டனர். கிறிஸ்துவே என் வாழ்க்கையின் மகிழ்ச்சியும் பெலனுமாய் இருக்கிறார் என்று சொன்னார். சிறைக் கைதிகள் ஒவ்வொருவராய் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். உடனே அந்த ருமேனிய அரசு சுவிசேஷகரை கடுமையாக தாக்கி தனிமையாக இருட்டறையில் அடைத்து சித்திரவதைக்குள்ளாக்கினர். ஆயினும் அநேக சிறைக் கைதிகள் இயேசுவை ஏற்றுக் கொண்டு சாட்சியாக மாறினர்.
வேதத்திலும் கூட பவுலும், சீலாவும் சிறைச்சாலையிலிருந்து கால்கள் கைகள் கட்டப்பட்டவர்களாய் இருந்த போதும் கர்த்தருக்குள் துதித்துப் பாடினர். கர்த்தருக்குள் மகிழ்ந்திருந்தனர். அவர்கள் சுவிசேஷமாய் அறிவித்ததை வாழ்ந்து காட்டினர். அதனால் சிறைச்சாலை கதவுகள் திறந்தும், ஒருவரும் வெளியே தப்பிக்க நினைக்காமல் அனைவரது கட்டுகள் அவிழ்ந்தாலும் விடுதலையோடு இருந்தனர். "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலிப்பியர் 4:4) என்றார். அப்படியே வாழ்ந்தும் காண்பித்தார். அதனால் அநேக சபைகளை நிறுவினார் மட்டுமல்லாமல் அநேக நிருபங்களையும் எழுதியுள்ளார். அவை பரிசுத்த ஆவியானவரால் அங்கீகரிக்கப்பட்டு வேதத்திலும் இடம்பெற்றுள்ளது.
நமக்கு இது போன்ற கஷ்டங்கள் இல்லை. நம் நாட்டில் சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியானால் பல மடங்கு மகிழ்ச்சியுடனும், பெலமுடனும் இருந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு காண்பிக்கும் போது பலரை நரகத்தின் பாதையிலிருந்து விலக்கி பரமராஜ்ஜியத்திற்கு நேராக நடத்தி, திரளான ஆத்தும அறுவடை செய்து கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் திரளான பலனைப் பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. கிறிஸ்துவை சொல்கிறவர்களாக அல்ல காட்டுகிறவர்களாக வாழுவோம்.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாநிலத்திலும் 500 புதிய மிஷனெரிகள் நம் ஊழியத்தில் இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864