Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.11.2023 (Children’s day Special)
Share:

By Village Missionary Movement

Tuesday, 14-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 14.11.2023 (Children’s day Special)

 

அன்பு தகப்பன் 

 

"…சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது…" - மத்தேயு 19:14

 

குட்டிப்பிள்ளைகளே! இன்று உங்களுடைய நாள். சிறுவர் தினம்! Happy Children’s day! கை கொடுங்க. "நேரு மாமா" என்று சின்னப்பிள்ளைகள் அன்போடு அழைக்கிற ஒரு பிரதமர் நமக்கு இருந்தாங்க. அவர்களோட பிறந்தநாளைத்தான் சிறுவர் தினமாக கொண்டாடுகிறோம். பாருங்கள், பிரதமருக்கே உங்க மேலேதான் அன்பு. இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும் விட இயேசப்பாவுக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்கள் மேலே ரொம்ப கரிசனையா இருக்கிறார். அதைப் பற்றின உண்மை சம்பவம் ஒன்றை பார்ப்போமா?

 

அமெரிக்க தேசத்தில் இருந்து ஆன்கிரோமா என்ற ஊழியர் நம்ம தமிழ்நாட்டிற்கு சபையில் பிரசங்கம் பண்ணும்படி அழைக்கப்பட்டிருந்தார். அப்போது சொன்ன சாட்சியை அவரே சொல்ல கேட்போமா? "நான் குட்டிப்பையனாக இருந்தபோது அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் என்னுடைய அப்பா யாரென்றே தெரியாது. அம்மாவிடம் கேட்டால், அம்மா மிகவும் கோபப்பட்டு கத்துவார்கள். அன்பற்ற இடத்தில் வளர்ந்ததால் எப்போதுமே கவலையோடு அழுதுகொண்டே இருப்பேன். ஒருநாள் அம்மாவும் என்னை பார்க்கில் உட்கார வைத்துவிட்டு "இதோ வருகிறேன்" என்று சொல்லிச் சென்றவர்கள் சாயங்காலம் ஆகியும் வரவே இல்லை. இருட்டும்வரை ஒரே இடத்தில் இருந்த நான் அழ ஆரம்பித்தேன். பசி ஒரு பக்கம், பயம் மற்றொரு பக்கம். அந்த நேரத்தில் ஒரு ஐயா வந்து என்னை அன்போடே தூக்கி, கண்ணீரைத் துடைத்து, அவருடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு சென்றார். வயிறார சாப்பாடு கொடுத்து வீட்டிலுள்ள எல்லோரும் என்னிடம் சிரித்துப் பேசினார்கள்.  

 

மனசு ஜில்லுன்னு இருந்தது. அந்த வீட்டிலும் என்னைப் போலவே இரண்டு தம்பிகள் இருந்தார்கள். அவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க வருகிற டீச்சர் எனக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தாங்க. அந்த தம்பிகளோடே Sunday school க்கு தவறாமல் போனேன். அங்கு சொல்லிக் கொடுத்த பாட்டு, கதையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்தது. இயேசப்பா உன் மேலே ரொம்ப அன்பா இருக்காங்க என்று அவங்க சொன்ன வார்த்தை என்னை ரொம்ப சந்தோஷப்படுத்தியது. அன்றிலிருந்து இயேசப்பாவை அப்பா, அப்பா என்று கூப்பிட்டு எனக்கு வேண்டியதையெல்லாம் கேட்பேன். கிடைத்துவிடும். பல கஷ்டங்களுக்கு மத்தியில் இயேசப்பா பிள்ளையா வாழ்ந்து பெரியவனாயிட்டேன். இயேசப்பா என்னை ஊழியம் செய்யும்படி அழைத்தாங்க. என் வாழ்க்கையில் ஆண்டவர் செய்ததை மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பித்தேன். வரங்கள், வல்லமைகளை தந்தாங்க. இன்று உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து இந்த அன்பைப் பற்றி பேசுகிறேன். எனக்கே ஆச்சரியம்! என் அப்பா இருந்தா கூட இதுமாதிரி சிலாக்கியம் கிடைத்திருக்குமா?" என்று கூறினார். 

 

அன்பு செல்லங்களே! நீங்களும் அவரோட அன்பை புரிந்து கொண்டால் உங்களை அவர் விரும்புகிறபடி உயர்த்துவார். Ok வா.

- Sis. தெபோராள்

 

ஜெபக்குறிப்பு:  

மீடியா மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban holiganbet setrabet marsbahis giriş vaycasino giriş