Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.11.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 28-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 28.11.2023

 

நன்றியோடு வாழ்வோமா?

 

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" - சங்கீதம் 34:1

 

ஆப்பிரிக்காவில் "காரி" என்ற ஓர் இனப்பிரிவு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்து வருகிறது. அது என்னவென்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் நன்றி செலுத்தும் முறைதான்! அது மிகவும் சுவாரஸ்யமானது. நன்றி செலுத்தும் நபர், நன்றி செலுத்த விரும்புகிறாரோ, அவரது வீட்டிற்கே சென்று அவரருகே அமைதியாக அமர்ந்து கொள்வார். சிறிது நேரம் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்து தன் நன்றியை தெரிவிப்பார்.

 

ஆம், நாம் பரலோக தேவனுக்கும் நன்றி செலுத்த விரும்பினால் அவர் சமூகத்தில் மனப்பூர்வமாய் அமர்ந்திருப்பதுதான் ஏற்றவழி. பெத்தானியா மரியாள் அதையே செய்தாள். தேவ சமூகத்தில் நம் விண்ணப்பங்களை பட்டியலிடாமல் தேவன் செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்திக் கொண்டு மௌனமாக அவர் சமூகத்தில் அமர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் தேவனைப் பற்றி நாம் அறிய முடியும். மரியாளின் சகோதரனான லாசரு மரித்து நான்கு நாட்கள் கழித்து இயேசு வந்த போது மரியாள் இயேசுவின் பாதத்தில் விழுந்து அழுது "நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்" என்கிறாள். அவளை எங்கே வைத்தீர்கள் என இயேசு கேட்டதும், விசுவாசத்தோடு "வந்து பாரும்" என்கிறாள். யூதர்களோடு வேறொரு வார்த்தையும் சொல்லவில்லை. கல்லை அகற்றுங்கள் என்ற போதும் மார்த்தாள்தான் "நாறுமே" என்கிறாள். மரியாள் அதே இடத்தில் தேவ சமூகத்தில் விசுவாசத்தோடு அமைதியாக இருக்கிறாள். தன் சகோதரனை ஜீவனுள்ளவனாய் பெற்றுக் கொண்டாள்.

 

இதை வாசிக்கும் அன்பானவர்களே! உங்களுடைய காரியம் மரித்ததாயிருந்தாலும் தேவனுடைய சமூகத்தில் அமைதியாக, அவரிடம் கேள்வி கேட்காமல் அமர்ந்திருந்தாலே போதும். முடியாதது போல் இருக்கும் உங்கள் காரியமும் உயிர் பெறும். நன்றி சொல்ல தேவனிடம் வந்தீர்களானால் கேள்வியில்லாமல் வேண்டுதல்கள் மற்றும் விண்ணப்பங்களை பட்டியலிடாமல் அமைதலாய் தேவ சமூகத்தில் அமர்ந்து நன்றி செலுத்தி பாருங்கள். இது உங்கள் வாழ்வை மாற்றும்.

- Bro. காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:  

நமது வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino perabet perabet giriş perabet perabet giriş perabet perabet giriş perabet güncel giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Holiganbet Holiganbet Giriş Holiganbet Güncel Giriş Superbetin Superbetin Giriş Superbetin Güncel Giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş betcio Betcio Giriş betcio güncel giriş atlasbet atlasbet giriş atlasbet güncel giriş Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz matbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel matbet romabet lunabet