Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.12.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 17-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 17.12.2023

 

ஏஞ்சல்ஸ்

 

"தேவதூதன் அவர்களை நோக்கி; பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" - லூக்கா 2:10

 

குட்டிச் செல்லங்களே, எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா? ஆமா, குட்டீஸ் இது கிறிஸ்துமஸ் நாட்கள்! கிறிஸ்துமஸ் -னா என்ன? 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் பாலகனாய் பிறந்தார் இயேசுகிறிஸ்து! நமது பாவங்களை மன்னிக்க, நம்மை மீட்க அவர் பிறந்த அந்த நாளைத்தான் கிறிஸ்துமஸ் ஆக கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் என்றாலே புது டிரெஸ், ஸ்வீட், கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா இப்படி செம ஜாலியா இருப்பீங்க அப்படித்தானே!

 

உங்களைப் போலத் தான் ஜெமின்னு ஒரு பாப்பா இருந்தா. அவள் அவங்க அம்மாட்ட போய், அம்மா இந்த கிறிஸ்துமஸ்க்கு எனக்கு ஏஞ்சல் (தூதன்) போல ட்ரெஸ், Wings, Crown, எல்லாம் வாங்கி தாங்க, நானும் ஏஞ்சல் போல ஜொலிக்கணும் என்றாள். உடனே அம்மா, ஜெமி அந்த ஏஞ்சல் பற்றி ஏதாவது உனக்கு தெரியுமா, அவங்க கிறிஸ்துமஸ் அன்னைக்கு என்ன காரியம் செய்தாங்க தெரியுமா என்று கேட்டார்கள். உடனே ஜெமி அப்படி என்ன பெரிய காரியம் பண்ணிட்டாங்க என்று கேட்டாள். அம்மா ஏஞ்சல் பற்றி சொல்லத் துவங்கினார்கள்.

 

அந்த நாட்களில் ஆடு மேய்க்கும் மேய்ப்பர்களை யாரும் ஒரு பொருட்டாகவே எண்ண மாட்டார்கள். ஒதுக்கப்பட்டவர்களாய், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கடுங்குளிரில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டு வயல்வெளியில் இருந்த நாட்களில் தான் இயேசுகிறிஸ்து பெத்லகேமில் பிறந்தாங்க. இந்த ஏஞ்சல் அரசர் அரண்மனைக்கோ, வசதி படைத்தவர்களையோ தேடிப் போகாமல் இயேசப்பா பிறந்த அந்த நல்ல செய்தியை வயல் வெளிக்கு சென்று மேய்ப்பருக்கு அறிவித்தார்கள். உங்களை மீட்க, உங்களை இரட்சிக்க ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார் என்று சொன்னார்கள். உடனே மேய்ப்பர்கள் சந்தோஷத்தில் அற்பமாய் எண்ணப்பட்ட நம்மை மீட்க ஒருவர் பிறந்திருக்கிறாரா என்று சொல்லி அப்பவே அந்தக் குளிரில், இயேசுவைப் பார்க்க புறப்பட்டார்கள். இருளுக்குள் இருந்த அவர்களுக்கு இயேசு என்ற வெளிச்சத்தை ஏற்றி விட்டார்கள் இந்த ஏஞ்சல்ஸ். இந்த ஏஞ்சல்ஸ் போய் மேய்ப்பருக்கு சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு தெரிந்திருக்குமா? எனவே ஏஞ்சல் போல டிரெஸ் போட்டு Crown வைத்து நம்மை நாமே அலங்கரித்தால் மட்டும் போதாது. நீயும் இயேசப்பா பற்றி தெரியாதவங்களுக்கு சொல்லணும் ஓகே வா என்றார்கள். உடனே ஜெமி அம்மா நான் நிச்சயமாக இந்த கிறிஸ்துமஸ்க்கு இயேசப்பா பற்றி எல்லோருக்கும் சொல்லி அவர்களுக்கு உதவி செய்து அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் ஐ கொண்டாடி இயேசப்பாவை சந்தோஷப்படுத்தப் போறேன் என்றாள். என்ன குட்டீஸ் நீங்களும் இந்த ஜெமி போல நல்ல தீர்மானம் எடுப்பீங்களா?

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet