Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.01.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 07-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 07.01.2024 (Kids Special)

 

எல்லாமே புதுசு

 

"இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்;…" - ஏசாயா 43:19

 

டியர் செல்லங்களா! எப்படி இருக்கீங்க. Happy New Year. புதுசுன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்தானே. புது டிரஸ், புது வளையல், புது Shoes என புதுச பார்த்தாலே உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தானே! ஆமா! இயேசப்பாவுக்கும் நமக்கு எல்லாம் புதுசா, பெஸ்டா கொடுக்கத்தான் பிடிக்கும். எதையும் புதிதாக்கவும் இயேசப்பாவாலே முடியும். சரி, கதைக்குப் போவோமா?

 

ரமேஷ் 8ம் வகுப்பு மாணவன். அவனுடைய குடும்பத்தில் ரொம்ப கஷ்டம், பெரிய பிரச்சனை, சந்தோஷமே இல்லை. அம்மா எப்போதும் ரொம்ப கவலையாதான் இருப்பாங்க. சாப்பாடு கூட பழைய சாதம், குழம்பு என்றுதான் இருக்கும். துணிமணிகள் கூட யாராவது கொடுக்கும் பழையதுதான். வீட்டு ஜாமான்கள் எல்லாம் பழையதும், உடைஞ்சதும் தான்.

 

ஒருநாள் அவனது வீட்டுக்கருகே நடக்கும் Sunday school -க்கு போனான். அதை நடத்தின அண்ணன் சொன்னாங்க "இயேசு நம் ஒவ்வொருவரையும் புது சிருஷ்டியாக மாற்றுவார். அப்புறம் பழையவைகள் எல்லாம் ஒழிந்து போகும், எல்லாம் புதிதாகும்" என்றாங்க. "நீ மட்டும் இயேசப்பா கிட்ட உன்னைக் கொடுத்துவிட்டா போதும். உன்னை புது சிருஷ்டியாக மாற்ற இயேசப்பா ஆயத்தமாயிருக்காங்க" என்றும் சொன்னாங்க. அவன் அப்படியே நம்பி இயேசப்பாகிட்ட தன்னை ஒப்புக் கொடுத்தான். ரொம்ப சந்தோஷமா இருந்தான். Sunday School முடிந்ததும் ஒரு புது பென்சில் பாக்ஸ், பேனா, ரப்பர் எல்லாம் கொடுத்தாங்க. அதுதான் அவனுக்கு முதல் புதியது.

 

மகிழ்ச்சியோடு வீட்டிற்கு சென்றான். அங்கு அவனாலே நம்ப முடியாத அளவிற்கு வீட்டிலும் அநேக புதிய பொருட்கள் இருந்தன. அவைகள் எப்படி வந்தது என வியந்தான். அவங்க அம்மா வேலை செய்த வீட்டார் வெளிநாட்டில் செட்டில் ஆகப்போகிறோம் என்று அவர்களுடைய புதுச் சாமான்களையெல்லாம் இவங்க அம்மா உண்மையா வேலை செய்ததினால் Gift ஆகக் கொடுத்துட்டாங்க. எல்லாம் புதிதாயின. Sunday School - ல் நடந்ததை அவங்க அம்மாவிடம் சொன்னான். இவ்வளவு வருடம் கிடைக்காத புதிய ஆசீர்வாதம் இயேசப்பாவினால் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். தம்பி, தங்கை! உங்க வாழ்க்கையும் புதுசா மாறணுமா? இயேசப்பா கைகளிலே உங்களை ஒப்புக் கொடுங்க. அவர் உங்கள் வாழ்வில் புதிய காரியத்தைச் செய்வார். Ok குட்டீஸ், Bye!

- Sis. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet