Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29.01.2024
Share:

By Village Missionary Movement

Monday, 29-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 29.01.2024

 

அமைதி காப்போம்

 

"பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றம் சாட்டுகையில் அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை" - மத். 27:12

 

2012ம் ஆண்டு, சிட்னி மைதானத்திலே ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. எல்லைக்கோட்டின் அருகே நம் இந்தியவீரர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது பார்வையாளர்கள் அவரை கேலி செய்தார்கள். அவதூறாகவும் பேசினர். இதனால் கோபமடைந்த வீரர் தன்னை கேலி செய்தவர்களுக்கு தானும் செய்கையில் பதிலடி கொடுத்தார். விளையாடும் நேரத்தில் அவரது இந்த நடவடிக்கையால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மைதானத்தில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் ஏதாவது ஒரு கண்காணிப்பு கேமராவில் வந்து விடுவதால் தவறை மறைக்க இயலாது. இந்த குற்றத்திற்காக அவருக்கு ரூ 1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டது. அது அவருக்கு அந்த போட்டியில் விளையாடுவதற்காக கிடைத்த ஊதியத்தில் பாதித்தொகையாகும். ஏன் இவ்விதம் நடந்து கொண்டீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, "அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் அவதூறாக பேசினார்கள். நான் பொறுமையிழந்து அவ்விதம் நடந்து கொண்டேன்" என்றார். நம் நல்மதிப்பை நமது வார்த்தையினால், செயலினால் இழந்து விடக்கூடும். பதிலுக்குப் பதில் செய்வதால் நமது தரம் தாழ்ந்துவிடவும், அதின் பின்விளைவாக பல பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிடலாம்; அப்படிப்பட்ட நேரங்களில் அமைதி காப்பதே ஞானமான செயல்.

 

தேசாதிபதி ஆச்சரியப்படுமளவிற்கு இயேசுகிறிஸ்து அமைதிகாத்தார். எத்தனையோ பொய் குற்றச்சாட்டுகள், நிந்தையான பேச்சுகள் அடுக்கடுக்காய் அவர் மேல் எறியப்பட்டபோதும் அவரோ பேசாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தார். தன்னை நியாயப்படுத்தவோ குற்றச்சாட்டுகளை மறுக்கவோ அவர் வாய்திறவாமல், நலமானதை கூட அவர் பேசவில்லை.

 

பிரியமானவர்களே! சங்கீதக்காரன் கூறுகிறான்: "என் நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து ...... என் வாயை கடிவாளத்தால் அடக்கி வைப்பேன்" (சங். 39:1,2) என்று! நாமும் பலவித பிரச்சனைகளிலே, கோபத்தின் உச்சகட்டத்திலே உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடாமல் நம் வாயை கையினால் மூடிக்கொள்ளப் பழகிக்கொள்வோம். தேவனிடத்தில் மாத்திரம் நமது காரியங்களுக்காக முறையிடுவோம். தேவன் நியாயத்தை வெளிப்படுத்துவார்.

- T. வின்சென்ட்

 

ஜெபக்குறிப்பு:

நமது வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஓய்வு பெற்ற மிஷனெரி அறைகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom