Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02.02.2024
Share:

By Village Missionary Movement

Friday, 02-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 02.02.2024

 

முதல் அடி

 

"…லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்" - நியா. 4:4

 

நான் வாலிபனாயிருந்த போது ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தூங்குவது வழக்கம். அப்படி தூங்கிக் கொண்டிருக்கும் போது பூட்டிய அறைக்குள் ஒருவர் வெண்ணாடை அணிந்தவராக உலக மக்களுக்காக அழுது கொண்டிருந்தார். நானே மெய்யான தேவன் என்னால் படைக்கப்பட்ட என் ஜனங்களுக்கு சமாதானம் தர விரும்புகிறேன், சந்தோஷம் தர விரும்புகிறேன். ஆனால் அவர்களோ என்னிடம் வர மறுக்கிறார்களே என சொல்லி சொல்லி அழுதார். கண்முன் அழுபவரை கண்டு என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. நானும் அழுதேன என் அழுகையின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து கதவைத் தட்டி ஏன் அழுகிறாய் என கேட்டார்கள். அன்றிலிருந்து ஜனக்கூட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகுரல் கேட்கும். நானும் அழ ஆரம்பித்து விடுவேன். ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ நண்பர் மூலம் அழுகிறவர் இயேசு கிறிஸ்து என அறிந்தேன். ஜனங்கள் அவரை அறியவில்லை என அழுகிறாரே. நாம் மற்றவர்களுக்கு அவரைக் குறித்து சொல்லலாமே என ஆரம்பித்து முதல் அடி எடுத்து வைத்ததுதான் இந்த ஊழியம்.

 

இதேபோல் இஸ்ரவேல் ஜனங்களை கானானிய ராஜாவின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுவிக்க எண்ணினார். அவருடைய திட்டத்திற்கு முதல்அடி எடுத்து வைத்தவள் தான் தெபொராள். தெபொராள் பாராக்கிடம் அதை அறிவிக்கிறாள். அவள் குடும்பப்பெண், நியாயம் விசாரிக்கிறவர்களாயிருந்தும் தேவன் விரும்பியதை செய்ய முதலடி எடுத்து வைத்தாள். அதுவரை போருக்கு செல்லாதவள் தயங்காமல் சென்றாள். தேவன் என் ஜனத்தை விடுதலையாக்க விரும்பும்போது, நான் தாமதித்து அதனால் என் ஜனம் கஷ்ட படவிடக்கூடாது என தாமதிக்காமல் சென்றாள். இஸ்ரவேலர் வெற்றி பெற்றனர்.  

 

இதை வாசிக்கும் பிரியமானவர்களே, நான் ஊழியத்தை துவங்கும் போது எனக்கு எப்படி ஜெபிப்பது என்று தெரியாது. வேதம் கிடையாது. ஆனால் எனக்கு சுகம் தந்த தேவன் அழுகிறார். அவர் கண்ணீரை துடைக்க வேண்டும் என உடனே அவரது கண்ணீரை துடைக்க ஊழியத்தை துவங்கினேன், புறப்பட்டுப் போனேன். தெபொராள் தன் மக்களின் நிலையறிந்து தேவனின் திட்டம் அறிந்து போர்க்களத்திற்கு புறப்பட்டாள். தேவன் உடனிருந்து ஜெயம் தந்தார். இதுபோல் இந்த ஆண்டு தெபொராளாய் எழும்புகிறவர்களை 313 தாலுக்காக்களிலும் எழுப்ப தேவன் திட்டம் தந்துள்ளார். அவர்கள் ஒரு வீட்டில் காலை 10 மணி முதல் 1 மணி வரை கூடி ஜெபித்து விட்டு 2 மணி முதல் 4 மணி வரை சுவிசேஷத்தை கிராமங்களில் அறிவிக்க வேண்டும். நீங்களும் தெபொராளாக முதல்அடி எடுத்து வையுங்கள். தேவன் உடனிருந்து உங்கள் ஊழியத்தையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். பலனோடு பரமனை தரிசிக்கலாம். அல்லேலூயா!

- K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு 

எல்லா தாலுகாக்களிலும் 30 வீட்டு ஜெபக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş