Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.02.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 11-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 11.02.2024 (Kids Special)

 

தாத்தா தந்த GIFT

 

"…சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்" - நீதிமொழிகள் 10:4

 

ஜானும், ஜெஸியும் அண்ணன் தங்கச்சி. என்ன குட்டீஸ் உங்க வீட்டிலும் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி இருக்குறாங்க தானே! ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் இருக்க மாட்டீங்க, அப்படித்தானே? திடீரென்று டமால், டுமீல்ன்னு சத்தம் கேட்கும். சண்டை வரும் அடுத்து கொஞ்ச நேரத்தில் சரியாகி விளையாட ஆரம்பித்து விடுவீங்க இல்லையா? உங்களை போல தான் ஜானும், ஜெஸியும் இருந்தாங்க. ஜான் எல்லா காரியத்திலேயும் சுறுசுறுப்பாய் இருப்பான். ஆனால் ஜெஸி அப்படி இருக்க மாட்டாள். ரொம்ப சோம்பேறியாய் இருப்பாள். அம்மாவும், அப்பாவும் சொல்லுவாங்க பாப்பா இப்படி இருக்கக் கூடாது என்று advice பண்ணுவாங்க. இதையெல்லாம் கவனித்த தாத்தா ஜானுக்கும், ஜெஸிக்கும் ஒரு வேலை கொடுப்பேன். அதை நல்லபடியா செய்தால் சூப்பரான கிப்ட் வாங்கித்தருவேன் என்று சொன்னதும் . . . தாத்தா சொல்லுங்க என்று ரொம்ப ஆர்வத்தோடு கேட்டாங்க.

 

உடனே தாத்தா இரண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு விதையைக் கொடுத்து இதை நிலத்தில் ஊன்றி தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கணும்னு சொன்னதும் ஜான் தினமும் அவன் வேலையை சரியாக செய்தான். செடி தோன்றி இலை வந்ததும் ஜானுக்கு ரொம்ப சந்தோஷம். ஜெஸி நல்லா தூங்கிக் கொண்டே இருந்தாள். அவள் வேலையை சரியாக செய்யவில்லை . ஜான் வளர்த்த செடி நன்றாக வளர்ந்து பூ பூக்க ஆரம்பித்தது. ஆனால் ஜெஸியோட செடியோ மண்ணோடு மண்ணாய் மக்கிப் போனது. தாத்தா ஜானுக்கு பிடித்த சூப்பரான சைக்கிள் ஒன்றை வாங்கி நீ சுறுசுறுப்பாய் கொடுத்த வேலையை சரியாய் செய்ததால் இந்த பரிசு என்று சொன்னார். இதைப் பார்த்த ஜெஸி தாத்தா எனக்கு ஒன்றும் இல்லையா? என்று கேட்டாளாம். உனக்கு கொடுத்த வேலையை நீ சரியாய் செய்யாததால் நீ Gift -ஐ இழந்து போனாய். நான் மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி இன்னொரு விதையை கொடுத்து இதை சரியாய் செய்தால் உனக்கும் Gift வாங்கி தருகிறேன் என்று தாத்தா சொன்னார். உடனே ஜான் ஜெஸி வா நீயும், நானும் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவோம் என்று சொன்னதும் ஜெஸிக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. என் சோம்பேறி தனத்தால் தாத்தாவின் Gift -ஐ இழந்து விட்டோமே என்று நினைத்து தன் சோம்பேறித் தனத்திற்கு ஒரு முடிவு கட்டப் போகிறேன் என நினைத்து ஜான் மாதிரி நானும் சுறுசுறுப்பாய் இருப்பேன் என தீர்மானித்தாள்.

 

குட்டி செல்லங்களே! நீங்களும் கூட உங்க சோம்பேறி தனத்தினால் நிறைய நன்மைகளை Miss பண்ணி இருக்கலாம். இனிமேல் நீங்களும் சுறுசுறுப்பாய் இருந்து உங்களுக்கு கிடைக்கும் Blessings -ஐ பெற்றுக் கொள்ள Ready தானே.

- Mrs. ரூத் சார்லஸ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet