Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.02.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 15-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 15.02.2024

 

நன்றியோடு . . .

 

"…நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." - கொலோ. 3:15

 

அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு மனிதர் வருட இறுதி நாட்களில் தேவனின் பாதத்தில் அமர்ந்து அவ்வருடத்தில் நடந்த நிகழ்வுகளை சிந்தித்தார். இந்த வருடம் எனக்கு இருதய ஆப்ரேஷன் நடந்தது, நன்றாக பார்த்த வேலையில் இருந்து பணி ஓய்வு பெற்று விட்டேன். மருத்துவம் படிக்கும் என் மகன் விபத்தில் சிக்கி கார் முழுவதும் நொறுங்கி சேதமாகி விட்டது. என் மகனுக்கும் சிறு காயங்கள். இந்த வருடம் மிகமிக மோசமான வருடம் என எழுதி வைத்து விட்டு தன் படுக்கையில் படுத்துக் கொண்டார். சிறிது நேரம் சென்று அவர் மனைவி அந்த பேப்பரைப் பார்த்தார். பின்பு தனியறையில் சென்று ஜெபிக்க ஆரம்பித்தார். "ஆண்டவரே, மிக பரபரப்பாக ஓடின என் கணவருக்கு ஓய்வு தந்து இளைப்பாறுதலோடு வாழ உதவினீர் நன்றி! இருதய நோயினால் மேஜர் ஆப்ரேஷன் செய்த வேளையில் என் கணவருக்கு தந்த ஆயுசு நாட்களுக்காக நன்றி! என் மகனுக்கு நடந்த விபத்தில் அவனுக்கு தந்த பாதுகாப்பிற்காய் நன்றி! என்று கண்ணீரோடு நன்றி செலுத்தினார் அவருடைய மனைவி. பாருங்கள் இருவருடைய பார்வையும் இருவிதமாயிருந்தது. ஆனால் தேவன் யாருடைய மனநிலையைக் கண்டு மகிழந்திருப்பார்? ஆம், நன்றி நிறைந்த உள்ளத்தைக் கண்டே!

 

பத்துப்பேர் சுகத்திற்காக இயேசுவிடம் வந்து எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். இயேசுவும் அவர்களுக்கு அற்புத சுகத்தைக் கொடுத்து, ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். ஆனால் அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பி வந்து உரத்த சத்தத்தோடு தேவனை மகிமைப்படுத்தினான். அப்பொழுது இயேசு சுத்தமானவர்கள் பத்துப் பேர் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே? என கேட்கிறார்.

 

பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் எதையும் நம்மிடம் எதிர்பார்த்து நம்மை இரட்சிக்கவில்லை, அழைக்கவில்லை, அபிஷேகிக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கின்றார். அது நாம் நன்றியுள்ள இருதயத்தோடு இருக்கிறோமா? என்பதே. அவர் நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கு செய்த நன்மைகள் தான் எத்தனை! எத்தனை! ஆனால் நாம் பல நேரங்களில் ஆண்டவர் செய்த நன்மைகளை மறந்து அவரைக் குறித்து முறுமுறுக்கிறோம். ஒவ்வொரு நாளும் இயேசுவானவர் நம்மை இப்பூமியில் உயிரோடு வைத்திருப்பதை எண்ணினால் நிச்சயம் நம்மால் தேவனுக்கு நன்றி செலுத்தாமல் இருக்கவே முடியாது. உண்மைதானே. நாமும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறவர்களாய் காணப்படுவோம். தேவன் தரும் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போம்.

- Mrs. தவமணி வைரவேல்

 

ஜெபக்குறிப்பு: 

313 தாலுக்காக்களிலும் நடத்தப்படவுள்ள சிறுவர் மற்றும் வாலிபர் முகாமிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet