Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16.02.2024
Share:

By Village Missionary Movement

Friday, 16-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 16.02.2024

 

பிரயாசத்தின் பலன்

 

"மேலும் நடுகிறவனும், நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்" - 1 கொரி. 3:8

 

பெண்மணி ஒருவர் பூச்செடிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். அரியவகை மலர்ச்செடி ஒன்றை தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தார். ஒவ்வொரு நாளும் அதற்கு தண்ணீர் ஊற்றி சிறப்பாக பராமரித்தார். அந்தப் பூச்செடி வேகமாக வளர்ந்து சுவற்றில் கொடியாக படர்ந்தது. அந்தச் செடியில் பூக்கள் மலரும் என எதிர்பார்த்த அந்த பெண்மணிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அந்தச் செடியில் எந்த பூவையும் காணவில்லை, தன் பிரயாசம் பலனற்று போய்விட்டதே என சோர்ந்து போனாள். ஒருநாள் அந்த தோட்ட சுவருக்கு மறுபுறம் குடியிருந்த வேறொரு பெண் அந்தச் செடியை புகழ்ந்து பேசினாள். பூக்கள் இல்லாத அந்தச் செடியை ஏன் இப்படி புகழ்கிறாய் என்று கேட்டாள் அந்த செடியை வளர்த்த பெண். பூக்கவில்லையென்று யார் சொன்னது? சுவரின் மறுபுறம் வந்துபார் என்றாள் அந்த பக்கத்து வீட்டு பெண். மறுபுறம் மலர்ந்து நின்ற பூக்களின் அழகில் மெய் மறந்து நின்று "என் பிரயாசம் வீணாகவில்லை" என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.

 

இதேபோல்தான் ஆண்டவருக்காக பிரயாசப்பட்டு தன் இனத்தையும் ஜனத்தையும் விட்டு வந்தாள் ரூத். ஆரம்பத்தில் அவள் எடுத்த முடிவு பலன்தராததைப் போல் இருந்திருக்கலாம். ஆனால் முடிவில் இயேசு கிறிஸ்துவின் முப்பாட்டியாகும் சிலாக்கியத்தை பலனாக பெற்றாள். பெத்தானியா மரியாள் பலமாதங்களாய் சேர்த்துவைத்த பணத்தில் விலையேறப் பெற்ற தைலத்தை வாங்கி இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள். மனிதர்களின் பார்வையில் அது வீண் செலவாக இருந்தது. ஆனால் அந்த பிரயாசத்தின் பலனாக இன்றும் உலகமெங்கும் அவள் செயல் நினைவு கூறப்படுகிறது.  

 

ஆம், பிரியமானவர்களே! கர்த்தருக்காக நீங்கள் படும் பிரயாசங்கள் உங்கள் பார்வையில் பலன் இல்லாதது போல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அறியாத விதங்களில் அது பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதை மறந்து போகாதிருங்கள். சோர்ந்து போகாமல் உங்கள் பணியை தொடர்ந்து முழு முயற்சியுடன் செய்யுங்கள். ஆண்டவர் தாமே உங்கள் அனைத்து பிரயாசங்களுக்கான பலன்களையும் உங்களுக்கு கொடுக்க வல்லவராய் இருக்கிறார். ஆமென்!

- Mrs. எஸ்தர் மனோஜ்குமார்

 

ஜெபக்குறிப்பு:

எழுப்புதலுக்காக தினமும் 12 நிமிடம் ஜெபிக்கும் ஜெப பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet