Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.02.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 25-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 25.02.2024 (Kids Special)

 

ஆண்டு விழா

 

"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது…;” - பிலிப்பியர் 2:5

 

சின்னச் சின்ன சிட்டுக்குருவிகள் தங்கள் வண்ண வண்ண இறகுகளை காட்டி பறப்பது போல, வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கொண்டும், தலைகளை சிங்காரித்துக் கொண்டும் முகமலர்ச்சியுடன் அன்ன நடைபோட்டு ஆனந்தமாய் நடந்து வந்தார்கள் சிறுவர்கள். எல்லோரும் எங்கு வந்தார்கள் என்று தானே இவர்கள் நினைக்கிறீர்கள். அது வேறு எங்கும் அல்ல அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை நோக்கித்தான் வந்தார்கள். அவர்கள் பள்ளிக்கூடத்தில் அன்று ஆண்டுவிழா. என்ன குட்டீஸ்! நீங்களும் உங்கள் ஸ்கூலில் ஆண்டு விழாவிற்கு இப்படித்தானே செல்வீர்கள். அங்கு பணி செய்யும் ஆசிரியர்களும் கை நிறைய பரிசுப்பொருட்களுடன் அங்கு காட்சியளித்தனர். மற்றும் சிறப்பு விருந்தினராக business man சார்லஸ் Uncle-ம் அழைத்திருந்தார்கள். விழாவை சார்லஸ் Uncle தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது பல காரியங்களைப் பற்றி பேசினார். குறிப்பாக மாணவர்கள், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஜாதி மதம் என்று வேறுபாடு பார்க்க கூடாது என்று கூறி தனது பேச்சை முடித்தார். எல்லோரும் கைதட்டினார்கள்.

 

கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பல நிகழ்ச்சிகள் நடந்தன. கடைசியாக ஒரு நாடகம் நடித்துக் காட்டினார்கள் மாணவர்கள். இதில் அந்த business man சார்லஸ் Uncle பையனுடைய உடையை அவர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனின் மகன் உடுத்தி தன்னை செல்வந்தனைப் போலவும், வேலைக்காரனின் மகன் உடையை சார்லஸ் Uncle பையன் போட்டுக் கொண்டு ஒரு ஏழையாகவும் நடித்தார்கள். இவைகளை பார்த்துக் கொண்டிருந்த சார்லஸ்க்கு கசப்பும், வெறுப்பும், கோபமும், பொங்கி எழுந்து நாற்காலியை விட்டு எழுந்தார். கோபத்துடன் எழுந்த சார்லஸ்-ஐ கண்ட மாணவர்கள் சிலர், "Uncle இப்பத்தானே எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள்?" என்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்ட சார்லஸ் மனசாட்சி குத்தப்பட்டவராய் தனது தவறை உணர்ந்து எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு அந்த வேலைக்கார பையனையும் தன் பிள்ளை போல் நேசிக்க ஆரம்பித்தார்.

 

குட்டி தம்பி, தங்கச்சி நீங்களும் கூட பேசுறது ஒன்றும், செய்கிறது ஒன்றுமாயிருக்க கூடாது. இது வரையிலும் நீங்க எப்படி வேணாலும் இருந்திருக்கலாம். மற்றவர்களை அற்பமாய் கூட எண்ணியிருக்கலாம். அதையெல்லாம் இயேசப்பாகிட்ட இன்றே அறிக்கை பண்ணி இனிமேல் இயேசப்பாவுக்கு பிரியமான பிள்ளைகளாக வாழ வேண்டும். ஓகே கண்மணிகளா! bye, bye!!

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet