Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.02.2024
Share:

By Village Missionary Movement

Monday, 26-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 26.02.2024

 

சீக்கிரம் வருவேன்

 

"…மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்" - வெளி. 22:20

 

தேவபக்தி நிறைந்த மருத்துவர் ஒருவர் மிகுந்த திறமை வாய்ந்தவராக இருந்து வந்தார். இவரது மனைவி அனைத்து காரியங்களுக்கும் அவரது கணவரான மருத்துவரையே சார்ந்து இருந்தார். திடீரென்று அம்மருத்துவர் இறந்துவிடவே அவரது மனைவி கணவர் இல்லாமல் மிகவும் பரிதவிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவரோ சில நாட்களிலேயே ஆறுதலடைந்து தேறினதைக் கண்டார்கள். காரணம், அந்த மருத்துவர் தன்னுடைய டைரி குறிப்பில் இறுதியாக எழுதி வைத்திருந்த வார்த்தைகளே! அது என்னவென்றால் "வெளியே சென்றுள்ளேன். சீக்கிரத்தில் வந்து விடுவேன்" என்ற வார்த்தைகள். அவரது உள்ளத்தை நிரப்பி மிகுந்த ஆறுதலையும், தேறுதலையும் ஆண்டவரிடமிருந்து பெற்றார். அன்றைய நாளிலிருந்து மருத்துவரின் மனைவிக்கு இனி இவ்வுலக வாழ்வில் எல்லா நேரங்களிலும் எல்லா தேவைகளுக்காகவும் இயேசுவை சார்ந்து கொள்வோம். இவ்வுலக வாழ்வு முடிவல்ல இது ஒரு வாடகை வீடுதான். இயேசுவையும், அவரோடு கூட தன் கணவரையும் சந்திப்போம் என்று விசுவாசத்தில் பெலப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தினார்.

 

இயேசுகிறிஸ்து கடைசி இராபோஜனத்தில் இந்த பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதை பானம் பண்ணும் போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆண்டவருடைய பந்தி அவருடைய இரண்டாம் வருகையை நினைவுகூரும்படியாகவும், அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமெனவும் நமக்கு தெளிவுபடுத்தி காட்டுகிறது.

 

பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எப்படி நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டு, மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பினாரோ அதைப் போலவே அவருடைய இரண்டாம் வருகையும் மிகவும் முக்கியமான ஒன்று. அது எப்பொழுது வரும் என்று பிதா ஒருவர் தவிர மற்ற யாரும் அறியார். எனவே நாம் அந்த வருகைக்காக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம். அதுவரை நம்முடைய எல்லாக் காரியங்களுக்காகவும் அவரையே சார்ந்தும் இருப்போம். "இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்." (1கொரிந்தியர் 15:19) என்று வேதமும் நம்மை எச்சரிக்கிறது. அவருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நாமும் மற்றவர்களையும் ஆதாயப்படுத்தி இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுத்துவோம். ஏனென்றால் அவருடைய இரண்டாம் வருகை மிக சமீபம்!!

- Mrs. பியூலா

 

ஜெபக்குறிப்பு:  

 Day care centre மூலம் நாம் சந்திக்கும் ஆந்திரா, ஒடிசாவிலுள்ள சிறுவர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet grandpashabet betgit radissonbet